நீதியரசரும் பொதுமக்களின் வேலைக்காரர்கள்....

நாம் "ம் எதற்கெடுத்தாலும் சின்னஞ் சிறு பிரச்சனைகளுக்கு கூட நீதிமன்றங்களை நாடுகிறோம். நீதிபதிகள் என்ன சொல்கிறார்களோ அதற்கு காலத்தையும், பணத்தையும், வாழ்க்கையையும், மனதையும், தொலைத்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றங்கள் சொல்லும் தீர்ப்பை வேதவாக்காக நினைத்து சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.


இதைப்பற்றி விழிப்புணர்வுக்காக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி சுதந்திர இந்தியாவில் மக்களே எசமானர்கள். சுதந்திர இந்தியாவில் தற்போது மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றானது நீதிபதி ஆகும். கடவுளுக்கு சமமாக மதிக்கப்படும் பதவி நீதியரசர்கள். இவர்களும் அரசியலமைப்பு சட்டப்படி பொதுமக்களின் வேலைக்காரர்கள் (Public Servent) என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


அரசியல்- அரசியலமைப்பு சட்ட திட்ட சாசனத்தை உருவாக்கியவர்கள் நீதிபதிகள் அல்ல. பாராளுமன்றம் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு தான் புதிய இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்படுகிறது.


பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டதுதான் நாம் இப்போது பயன்படுத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள். தற்போது சில வழக்கின் தீர்ப்புகளை  பார்த்தால் பயமும், அச்சமும் ஏற்படுகிறது. இருப்பினும் தீர்ப்பை மதித்து சாசன கோட்பாடு மற்றும் விதிகளை பின்பற்றும் முறை தற்போது இருந்து வருகிறது.


இந்திய அரசியல் சாசனம் - கோட்பாடு 139 மற்றும் 140 பின்வருமாறு கூறுகின்றன.


இந்திய அரசியல் சாசன கோட்பாடு 139 - உச்சநீதிமன்றத்திற்கு ஆள் கொணரவைக்கும். (கேபியஸ்கார்பஸ்) மனு, நெறிமுறை உறுத்தும் (உணர்த்தும்) (மே மண்டஸ்) மனு, செயலுறுத்தும் (செர்ஷியாராரி) தடை விதிக்கும் (புரோஷிடர்) தகுதி முறை மனு, (கோவாராண்டோ ) அல்லது அத்தகைய மனுக்களின் மீது நீதிப் பேராணைகளை (ரிட்) உத்தரவுகளை, இதன் நெறிமுறைகளை விதித்து அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் மூலமே வழங்க வேண்டும் என்று கூறுகிறது.


இந்திய அரசியல் சாசன கோட்பாடு 140ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை அதிக திறமையோடு செயல்படுத்துவதற்கு தேவைப்படும் அல்லது வேண்டப்படும் அதிகப்படியான அதிகாரங்களை சட்டத்தின் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு நாடாளுமன்றம் வழங்கலாம் என கூறுகிறது.


இந்திய அரசியல் சாசன கோட்பாடு ... (2)ன் படி உச்சநீதிமன்ற நீதிபதிகளையும், உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் நியமிப்பவர் குடியரசுத் தலைவர். இந்திய அரசியல் சாசன கோட்பாடு 74(1)ன் படி குடியரசு தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையின் படிதான் செயல்பட வேண்டும். எனவே, இதன் மூலம் நீதிபதிகளை நியமிப்பவர்கள் (மறைமுகமாக) பொதுமக்களாகிய நாம்தான்.


அதேபோன்று நீதிபதிகளை நீக்கும் அதிகாரம் மக்களாகிய நாம் தேர்ந்தெடுத்த பாராளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என இந்திய அரசியல் சாசன கோட்பாடு 24 (4) கூறுகிறது. இந்திய அரசியல் சாசன கோட்பாடு 32 (1)ன் படி இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கு அளித்து உள்ள அடிப்படை உரிமைகளை நீதிபதிகள் (நீதிமன்றம்) பறிக்க முடியாது என கூறுகிறது.


இந்திய அரசியல் சாசனம்-கோட்பாடுகள் 31 மற்றும் 37ன் படி அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறுகிறது. எனவே, அரசின் கொள்கை முடிவை எடுக்க வைப்பவர்கள் மறைமுகமாக பொதுமக்களாகிய நாம்தான் என்பதை நினைவு கூரவேண்டும்.


இந்திய அரசியல் சாசன கோட்பாடு 50ன் படி தற்போதுள்ள நீதித்துறையை முன்பு இருந்த நிர்வாகத்துறையிடம் இருந்து தனியாக பிரித்து நீதித்துறைக்கு பாராளுமன்ற ஒப்புதல் மூலம் கொண்டு வந்தவர்கள் நீதிபதிகள் (நீதிமன்றம்) அல்ல.


பொதுமக்களாகிய நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் தான். இந்திய அரசியல் சாசன கோட்பாடு 368 (1)ன் படி இந்திய அரசியல் சாசனத்தை திருத்தும் அதிகாரம்நீதிபதிகளுக்கு (நீதிமன்றத்திற்கு) கிடையாது. பொதுமக்களாகிய நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்றத்திற்குத்தான் அந்த உரிமை உள்ளது.


இந்திய அரசியல் சாசன கோட்பாடு 125 (1) மற்றும் (2)ன் படி நீதிபதிகளுக்கு அளிக்கப்படும் சம்பளம் முதற்கொண்டு ஏனைய எல்லா வசதிகளையும் அளிப்பவர்கள்- பாராளுமன்றம் வழியாக பொதுமக்களாகிய நாம்தான். இந்திய தண்ட னைச் சட்டம் பிரிவு 21 (3)ன் படி நீதிபதிகள் பொதுமக்களின் வேலைக்காரர்கள் (Public Servants) என தெளிவாக குறிப்பிட்டுள்ளது.


தற்போது நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும், அரசியல்வாதிகளும், கடவுளாக மதிக்கக்கூடிய நீதித்துறையும், மக்களை பதம் பார்த்து வருகின்றன. இந்தியாவில் நீதிபதிகளை விட மக்களே அதிகாரம் மிக்கவர்கள். நாம் ஏமாற்றப்படுகின்றோமா... காப்பாற்றப்படுகின்றோமா... சூழ்நிலையை பொறுத்து....  1. உன்னை வதைத்துக் கொண்டு வாழ நினைக்காதே உன்னை சரி செய்து கொண்டு வாழ நினை அப்போதுதான் வெற்றியோ தோல்வியோ நீ வாழ்ந்து கொண்டிருப்பாய்

  2. திறமைகளை வெளி காட்ட துடிக்கும் மனம் வாய்ப்புகளுக்காக ஏங்கி தவிக்கும் திறமைகள் இருந்தும் வழி அறியா மனம் வழியை தேடியே காலம் கழிக்கும்

  3. உணர்ந்த மனதுக்கும் உணரா மனதுக்கும் வித்தியாசம் உண்டு உணாந்த மனம், மனம் தளர்ந்த போதும் நம்பிக்கையை கொடுக்கும் உணரா மனமோ மனம் தளர்ந்த போதும் அவ நம்பிக்கையை கொடுக்கும்

  4. உண்மைக்கும் பொய்மைக்கும் வித்தியாசம் உண்டு உண்மை உன் உள்ளுணர்வில் இருந்து வரும்.. பொய்மை உன் உள்ளுணர்வை மிதித்து விட்டு வரும்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்