இந்திய இறையாண்மையின் மீதான தாக்குதலே தேசிய குடியுரிமை திருத்த சட்டம்!

கடந்த 09.12.2019 அன்று மக்களவையில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த மசோதா என்பது இந்திய இறையாண்மையின் மீதான சர்ஜிக்கல் தாக்குதலாகவே அனைத்து தரப்பு மக்களும் * பார்க்கின்றனர். 1971க்கு முன்பாக பிறந்தவர்கள் தங்களின் பிறப்பு மற்றும் இருப்பிட சான்றிதழை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்பதோடு அவர்களது பெற்றோர்களின் பிறப்பு மற்றும் இருப்பிட சான்றிதழையும் காண்பிக்க வேண்டுமென்ற மத்திய பாஜக அரசின் உத்தரவு எள்ளளவும் ஏற்புடையதல்ல என்றே அனைத்து தரப்பு மக்களும் கருதுகின்றனர். 


1971க்கு முன்பாக பிறந்தவர்களிடம் பிறப்பு சான்றிதழ் இல்லையென்றால்...? அதற்கு பிறகு பிறந்த அவர்களது பிள்ளைகள் மற்றும் இப்போதைய பேரப்பிள்ளைகளும் இந்திய குடியுரிமை இழந்தவர்களாக கருதப்படுவர்; இவர்களிடம் பிறப்பு சான்றிதழ் இருந்த போதிலும் சரியே!


இந்த கருப்பு சட்டத்தால் நமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட 130 கோடி மக்களும் இந்திய குடியுரிமை இழக்கும் அபாயம் உள்ளதால், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் நாடு முழுவதும் இதனை எதிர்த்து போராட ஆரம்பித்தனர். NRC என்னும் பொருத்தமற்ற சட்டம் நாடு முழுவதும் மக்களின் கோபத்தையும் அதன் வெளிப்பாடான போராட்டங்களையும் ஆள்வோருக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், CAA என்னும் மத ரீதியிலான மக்களை பிரித்தாளும் சட்டத்தையும் மத்திய பாஜக அரசு அறிவித்தது.


பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களை NRC மூலம் அடையாளம் கண்டு அதில் முஸ்லிமல்லாத அனைத்து மதத்தவருக்கும் மீள் குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டு முஸ்லிம்களை மட்டும் அகதிகள் முகாமில் அடைக்கப்படலாமென்றும், அல்லது நாட்டில் இருந்து வெளியேற்றப் படுவார்கள் என்றும் CAA சட்டத்தின் மூலம் பாஜக மோடி அரசு அறிவிப்பு செய்தது.


இந்த அறிவிப்பு இந்திய அரசியல் சாசன விதி 14 மற்றும் 15க்கு எதிரானது என்பதை அரசியல் சட்ட வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்; இந்திய அரசியல் சாசனத்தின் 14வது விதி, இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்துக்கான உரிமையை பாதுகாக்கிறது. இந்த சட்டத்தில் அனை வருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமையுண்டு என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


அவ்வாறே 15வது அரசியல் சாசன விதியும் சாதி, மதம், இனம், பாலினம், பிறப்பு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு கூடாது எனக்கூறுகிறது; இத்தகைய விதிகளுக்கு எதிராகத்தான் CAA-2019 எனும் சட்டத்தை பாஜக அரசு அநியாயமாக இயற்றியுள்ளது.


இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான CAA என்னும் மத்திய பாஜக அரசின் சட்டம் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை மட்டும் குறிவைப்பதால்....மத ரீதியில் தேசத்தை பிளவுபடுத்துவதாக காங்கிரஸ், திமுக,மம்தா பானர்ஜி,கெஜ்ரிவால், கம்யூனிஸ்டுகள், SDPI போன்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் எச்சரிக்கின்றன. தங்களின் எச்சரிக்கையை அகிம்சை வழி போராட்டங்களின் மூலம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சாதி,மதம், மொழி பாகுபாடில்லாமல் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் மத்திய அரசுக்கு உணர்த்தி வருகின்றனர்.


இந்திய அரசியல் சாசன விதி 14 மற்றும் 15 என்பது பல்வேறு இனம்,மதம்,மொழி,கலாச்சாரம் என்னும் வேற்றுமையில் ஒற்றுமையே சுதந்திர இந்தியாவின் கலாச்சார அடையாளமாக உலக நாடுகளுக்கு அடையாளப்படுத்தி வருகிறது.


இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தியாவின் கலாச்சார இறையாண்மையின் மீது தேசிய குடியுரிமை திருத்த சட்டம் NRC என்னும் சர்ஜிக்கல் தாக்குதலை மத்திய பாஜக அரசு செய்திருப்பதாக நாட்டின் மீது அக்கறை கொண்ட நன்மக்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.


NRCக்கு எதிரான மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக NPR என்னும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பினை அவசரகதியில் பாஜக அறிவித்தது; அதாவது NPR என்னும் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது 1948ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாக எடுப்பது தான்; அதனால் வரும் ஏப்ரல் முதல் எடுக்கப்படுமென்று பாஜக அரசு அறிவிப்பு செய்துள்ளது.


கடைசியாக 2011ல் காங்கிரஸ் ஆட்சியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டிருப்பதால், இனி அடுத்து 2021ல் தான் எடுக்கப்பட வேண்டும்? ஆனால் பாஜக அவசரம் அவசரமாக இந்தாண்டே எடுப்பது தான் பல்வேறு ஐயங்களையும், சந்தேகங் களையும் நமக்கு ஏற்படுத்தியுள்ளது.


வழக்கமாக கேட்கப்படும் கேள்விகளோடு ழிஸிசிக்கு தேவையான கேள்விகளையும் இந்த கணக்கெடுப்பு படிவத்தில் சேர்த்திருப்பதால், இதன் மூலம் மறைமுகமாக NRCஐ நடைமுறைப்படுத்திட பாஜக அரசு திட்டமிட்டுள்ளதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது?


1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது அந்த சுதந்திரத்திற்காக சாதி, மதம், மொழி, இனம் என்று எவ்வித பாகுபாடுமில்லாமல் தங்களின் உயிர்,உடைமைகளை இழந்து போராடிய இந்தியர்களின் வாரிசுகளை இன்று மத ரீதியில் பிரித்தாளும் போக்கினை பாஜக கடைபிடிப்பது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். 


பாஜகவின் தேசிய குடியுரிமை திருத்த சட்டமென்பது இந்திய இறையாண்மையின் மீதான சர்ஜிக்கல் தாக்குதலாகும்; மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாளும் போக்கினை கைவிட்டு நாட்டின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மீது கவனம் செலுத்த வேண்டுமென்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகும்! 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்