கடைகளுக்கு தமிழில் பெயர் - இல்லையேல் கடும் அபராதம் : அமைச்சர் எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் தொழில்நிறுவனங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட வேண்டும் இல்லையென்றால் கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமை, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கே பாண்டியராஜன் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் வைக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.


தமிழ்நாடு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைப்பது தொடர்பாக 1948ம் ஆண்டில் வகுக்கப்பட்ட பிரிவுகள் 15 (1), (2) மற்றும் (3) படி, தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பழனிசாமியுடன் இதுகுறித்து கலந்தாலோசித்து அபராததொகையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார்.


1948ம் ஆண்டு வகுக்கப்பட்ட சட்டத்தின்படி, பெயர் பலகைகளில் 50 சதவீதம் தமிழ் இடம்பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். மற்ற மொழிகளின் விகிதம் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.


முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இறுதி ஆண்டில் உள்ள நிலையில், தமிழ் மொழியின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


2010-11ம் ஆண்டில், திமுக அரசும் தனது இறுதி ஆண்டில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பேக்கரிகள் அடுமனைகளாகவும், ஹார்டுவேர் கடைகள் வன்பொருள்கள் விற்பனையாகவும் பெயர் மாற்றம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்