தடையை மீறிபஸ்டேகொண்டாடியபள்ளிமாணவர்கள்.!

சென்னையில் போலீசாரின் தடையை மீறி பள்ளி மாணவர்கள் பேருந்துநாள் கொண்டாடியதுடன், பேருந்து மேற்கூரையில் ஏறி ஆட்டம்போட்டது அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


சென்னையில் பேருந்து நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் பயணிகளையும், பொதுமக்களையும் துன்பத்திற்கு ஆளாக்கும் நிலை அதிகரித்து வந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் ரூட்டுதல என்ற பெயரில் அவ்வப்போது பஸ்டே கொண்டாடுகின்றனர்.


போலீசாரின் எச்சரிக்கையையும், அறிவுறுத்தலையும் மீறி சாகசம் செய்ய நினைத்து சங்கடத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்களும் உண்டு. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களும் தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடி உள்ளனர்.


தாம்பரத்தில் இருந்து குன்றத்தூருக்கு செல்லும் பேருந்தில் சேக்கிழார் பள்ளி மாணவர்கள் சிலர் பஸ்டே என்பதை தெரிவிக்கும் வகையில் ஃபிளக்ஸ் பேனரை கட்டி, பேருந்தின் மேற்கூரை மீது நின்று ஆட்டம் போட்டனர்.


மாணவப் பருவம் என்பது மீண்டும் கிடைக்காத வரப்பிரசாதம். ஆட்டம், பாட்டம் என நண்பர்களுடன் உற்சாகமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் இருக்க வேண்டும்.


இதுபோன்ற பள்ளி மாணவர்களை அவர்களின் எதிர்கால நலன் கருதி ஆசிரியர்களும், பெற்றோரும் கண்காணித்து கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)