குஜராத் மாடலை டெல்லியில் நிகழ்த்துகிறார் அமித்ஷா..! - டாக்டர் தொல்.திருமாவளவன்

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கவளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த கபில் மிஷ்ரா நடத்திய ஊர்வலத்தைத் தொடர்ந்து கல்வீச்சு ற்றன.


இந்த கலவரத்துக்கும் சாவுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


'குஜராத் மாடலை' டெல்லியில் நிகழ்த்திப் பார்க்க அமித் ஷா திட்டமிட்டிருப்பது அப்பட்டமாக இதன் மூலம் தெரியவந்துள்ளது. மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்துவதன் மூலமே அரசியல் லாபம் ஈட்டலாம் என பாஜக திட்டமிட்டு இத்தகைய வன்முறைகளைத் தூண்டிக் கொண்டிருக்கிறது.


அதன் மதவாத சதித் திட்டத்துக்கும் ஆத்திரமூட்டலுக்கும் எவரும் பலியாகாமல் அமைதி காக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.” இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார், "நாட்டை இந்து - முஸ்லிம் என பிளவுபடுத்தும் ஆள்வோரின் சதியைத் தடுத்து நிறுத்தும் கடமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. காங்கிரஸ் இந்நேரம் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு