முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம்..

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக பேரவையில் விவாதிக்கக்கூடாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் வருகிற 12ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் நாராயணசாமி முன்னரே தெரிவித்திருந்தார். இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரவையில் விவாதிக்கக்கூடாது என்று புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடிதம் எழுதியுள்ளார்.


மேலும் குடியுரிமை சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டம் புதுச்சேரி மாநிலத்திற்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு