தென்காசி நபரால் சுரண்டை போலீஸார் அதிர்ச்சி

காவல்துறைக்குச் சொந்தமான நிலம் என வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை அகற்றிய கும்பல் பின்னர் தங்கள் சொந்த நிலம் போல அதைப் பத்திரப்பதிவு செய்திருக்கிறது.


நில மோசடி சம்பவங்களைத் தடுக்க காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், நில மோசடிகள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், மோசடிக் கும்பலொன்று காவல்துறைக்குச் சொந்தமான நிலத்தையே போலியாக பத்திரப் பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.


தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறைக்குச் சொந்தமான 2.15 ஏக்கர் நிலம் உள்ளது. சங்கரன்கோவில் செல்லும் சாலையின் முக்கிய இடத்தில் ஒதுக்கப்பட்ட அந்த நிலத்தில் காவலர் குடியிருப்பு கட்ட தீர்மானிக்கப்பட்டிருந்தது.


அந்த இடத்தில் ஒரு போர்டு வைக்கப்பட்டு, இது காவல்துறைக்கு சொந்தமான இடம்' என்கிற ப்பட்டிருந்தது. அதை சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கிழித்துவிட்டனர் தற்போது புதிதாகப் பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் எஸ்.பி அலுவலகத்தை அந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.


அரசு நிலத்தை மோசடியாகப் பதிவு செய்த ஆயநம்பி, அந்த நிலத்தின் 50 சென்ட் பகுதியை தன் மகன் சிவசக்தி பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நில மோசடிக்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.


மோசடி தொடர்பாக இசக்கிபாண்டி, ஆயநம்பி, சிவசக்தி, ராஜேந்திரன், பத்திர எழுத்தர்கள் ராமகிருஷ்ணன், முருகேசகுமார், பூபதிபெருமாள் ஆகிய 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பத்திரப்பதிவு அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட நிலையிலும், அரசு நிலத்தையே மோசடிக் கும்பல் மோசடி செய்யத் துணிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்