என்.ஆர்.இளங்கோ, திருச்சி சிவா மற்றும் எம்.எம்.அப்துல்லா.மாநிலங்களவையில்தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக பூர்வாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவையில் ஏப்ரலில் ஏற்பட உள்ள காலியிடங்களுக்கு, திமுகவுக்கு கிடைக்க உள்ள மூன்று இடங்களுக்கு, திமுக எம்.பி.திருச்சி சிவா, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக பூர்வாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மூன்றாவது இடம் ஒரு சிறுபான்மையினருக்கு வழங்கப்பட உள்ளது.  அவ்விடத்துக்கு வழக்கறிஞர் ஜின்னா அல்லது, எம்.எம்.அப்துல்லா ஆகிய இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.    


உதய்ண்ணாவின் ஆதரவு இருப்பதால், அப்துல்லாவுக்கான வாய்ப்புகள் அதிகம்.  அப்துல்லா, உதய்ண்ணாவின் பரிந்துரையாக இருந்தாலும், தகுதியானவர் என்பதில் சந்தேகம் இல்லை.  


திருச்சி சிவா, மிகச்சிறந்த பாராளுமன்றவாதி.   இவருக்கு மீண்டும் வழங்கப்படும் பதவி திமுகவுக்கு பெருமை சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  


மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,  தீவிர திராவிட உணர்வாளர்.  சிறந்த கிரிமினல் மற்றும் அரசியால் சாசன நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்.  இவரும் திமுகவுக்கும் தமிழகத்துக்கும்,  மாநிலங்களவையில் நிச்சயம் புகழ் சேர்ப்பார். 


மூவருக்கும் வாழ்த்துக்கள்.படத்தில், என்.ஆர்.இளங்கோ, திருச்சி சிவா மற்றும் எம்.எம்.அப்துல்லா.