முன்னுரிமைச் சான்றிதழ் இல்லாததால், அந்த வேலையை இழந்தேன். ஆவணங்கள், ஓட்டு மெஷின் ரூமில் இருக்கு!'

தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர், அரசு வேலைக்கான முன்னுரிமைச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். அப்போது, சான்றிதழ் கொடுப்பதற்கான சரிபார்ப்பு ஆவணங்கள், ஓட்டு மெஷின்கள் இருக்கும் அறையில் இருப்பதாக அதிகாரிகள் பதில் கூறியதால், இளைஞர் தவித்துவருகிறார்.


இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த இளைஞர், என் பெயர் சூர்ய பிரகாஷ். என்னுடைய தாத்தா தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலைக்காக இடம் கொடுத்தவர். அதற்கான நிவாரணத் தொகை எங்களுக்கு கொடுக்கப்பட்டது.


இடத்திற்கான ஆவணம், அரசாங்கம் நிவாரணம் கொடுத்ததற்கான ஆவணம் என அனைத்தையும் இணைத்து, அரசு வேலைக்கான முன்னுரிமைச் சான்றிதழ் கேட்டு, கடந்த ஜனவரி மாதம் தனி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். அதற்கு, ஜனவரி 13-ம் தேதி தனி வட்டாட்சியர் பதில் கொடுத்தார்.


அதில், உங்களுடைய நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்ததற்கான ஆவணங்கள் அனைத்தும், தேனி வட்டாட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆவணக் காப்பறையில் உள்ளன.


அந்த அறை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மின்னணு வாக்கு இயந்திரம், விவிபேட் வைத்திருப்பதால், பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, தற்போது சான்றிதழ் வழங்க இயலாது' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது


சரிபார்ப்பு ஆவணங்கள் இருக்கும் அறையை எப்படி தேர்தல் இயந்திரங்களை ஸ்டோர் செய்யப் பயன்படுத்துகின்றனர்? இதனால், மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?' என அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், உரிய பதில் இல்லை . இந்நிலையில், சமீபத்தில் அரசு வேலைக்கான நேர்காணல் வந்தது. அதில், முன்னுரிமைச் சான்றிதழ் இல்லாததால், அந்த வேலையை இழந்தேன்.


அடுத்ததாக, அரசு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன். நேர்காணல் செல்லும் முன்னர், முன்னுரிமைச் சான்றிதழ் கிடைக்குமா எனத் தெரியவில்லை. இல்லையென்றால், நீதிமன்றம் செல்ல இருக்கிறேன்” என்றார் வேதனையோடு.


அதிகாரிகள், தினந்தோறும் சரிபார்க்கும் ஆவணங்களை, தேர்தல் ஸ்டோர் ரூமாகப் பயன்படுத்தலாமா? என மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் கேட்டோம். தேர்தலில் பழுதான மற்றும் புதிய இயந்திரங்கள்தான் அந்த அறையில் உள்ளன.


மேலும், அந்த அறையின் உள்ளே இருக்கும் ஒரு அறைதான் ஆவணக் காப்பகம். இளைஞர் பாதிக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது; உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன். ஒரு வாரத்திற்குள்ளாக அந்த இளைஞருக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும்” என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)