திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி! "பாஜக ஒரு மிஸ்டுகால் கட்சி

"பாஜக ஒரு மிஸ்டுகால் கட்சி, மிஸ்டு கால் தலைவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்," என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டியளித்தார்.


திருவாரூர் வந்திருந்தவரிடம், மோடியை விமர்சிக்கும் வரை ஸ்டாலின் முதல்வராக முடியாது என பிஜேபி முரளிதர ராவ் கூறியுள்ளாரே என்கிற கேள்விக்கு.


"முரளிதர ராவ் இதுவரை எத்தனையோ விஷயங்களை கூறியிருக்கிறார். பாராளுமன்றத்தில் நாங்கள் ஜெயிப்போம் என்கிறார். அவர்கள் ஆட்களை விலைக்கு வாங்க முடியுமே தவிர தமிழகத்தை விலைக்கு வாங்க முடியாது பாவம் அவருடைய பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக பேசுகிறார். இப்படி பேசினால் தான் பதவியை அவர் தக்க வைத்துக் கொள்ளமுடியும்.


மேலும் தமிழகத்தை பிடிப்பது ஒருபுறமிருக்கட்டும், தமிழ்நாட்டில் பாஜக தலைவரை முடிவு செய்ய முடியவில்லை காரணம். அது ஒரு மிஸ்டு கால் கட்சி மிஸ்டுகால் தலைவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் வீட்டை சரி செய்யட்டும் பிறகு நாட்டை சரி செய்யலாம்," என்றார். குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை என கூறப்படுவது குறித்த கேள்விக்கு.


"குடியுரிமை சட்டத்தால் பாதிப்பில்லை எனக் கூறுபவர்கள் அந்த சட்டம் என்ன என்றே தெரியாமல் ஓட்டு போட்டவர்கள் இந்திய அரசியலமைப்பு அடிப்படை சட்டத்திற்கு இந்த குடியுரிமை சட்டம் முற்றிலும் முரணானது என்றும் ஏனென்றால் இது மதசார்பற்ற நாடு மதசார்பின்மை கேலிக்கூத்தாக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளது," என தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு