டென்ஷனில் முதல்வர்! நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்..

அமைச்சர்கள் போக்கு குறித்து செம அப்செட்டாக இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எதையாவது பேசி சிக்கலாகி விடுவதாக அவர் அதிருப்தியில் இருப்பதால்தான் கருத்து கூற தடை விதித்துள்ளதாக சொல்கிறார்கள்.


சமீப காலமாக ரஜினிகாந்த்தை வைத்து பல சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. அதற்கு ஆளாளுக்கு கருத்துக்களும் கூறி வருவதால் தொடர்ந்து ரஜினி லைம்லைட்டில் உள்ளார். இதனால்தான் திமுக தலைவர்கள் அடக்கி வாசிக்கின்றனர். அதேசமயம், அதிமுக தரப்பில் காட்டமாகவே ரஜினிக்கு எதிர்ப்புதெரிவித்து பேசி வருகின்றனர்.


அமைச்சர் கருப்பண்ணன் பேசும்போது, "நடந்து முடிந்த தேர்தலில் நாம் பண உதவி செய்தால்தான் அவர்கள் வேலை செய்ய முடியும்.


இதேபோலதான், அமைச்சர் பாஸ்கரன், “குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழக அமைச்சர்கள்எல்லோருமே எதிர்த்தோம். பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாக செல்ல நேரம் பார்த்து கொண்டிருக்கிறோம்” என்று சொல்ல அடுத்த பூகம்பம் வெடித்தது.


இது எல்லாவற்றிற்கும் மேலாக ராஜேந்திர பாலாஜி, ரஜினிக்கு ஆதரவான கருத்தை சொன்னதுடன் மட்டுமில்லாமல் ஒரு படி மேல போய் "சசிகலா சீக்கிரமாக சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை” என்று குண்டைத் தூக்கி போட்டதும்தான் அதிமுகவையே அதிர வைத்தது. இந்த நிலையில் இவர்களுக்குக் - கடிவாளம் போட்டுள்ளார் முதல்வர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


"திமுக தரப்பு எப்படிக் கட்டுக் கோப்பாக இருக்கிறது. அதிமுகவில் மட்டும் அமைச்சர்கள் ஏன் இப்படிப் பேசுகிறார்கள்” என்று முதல்வர் அதிருப்தி அடைந்துள்ளாராம். இதுதொடர்பாக முக்கிய அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது தனது அதிருப்தியை நேரடியாகவே முதல்வர் வெளியிட்டாராம்.


“திமுக தரப்பைப் பாருங்கள். அதை விடுங்கள், அம்மா இருந்தவரை நாமெல்லாம் எப்படி இருந்தோம். மறந்து விட்டீர்களா அதை. அம்மா சொன்னால்தானே நாமெல்லாம் கருத்து தெரிவிப்போம். தலைமைக்கு மீறிய வகையில் கருத்தை வெளியிடுவது சரியாக இருக்குமா.. என்றும் முதல்வர் கேட்டாராம். எனவே எல்லாப் பிரச்சினைகளுக்கும் கருத்துக் கூறுவதை தவிருங்கள். அது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்” என்றும் அறிவுறுத்தினாராம்.


“எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கட்சித் தலைமையுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தையே வெளியில் சொல்ல வேண்டும். அதுதான் சரியாக இருக்க முடியும். எனவே ஆளாளுக்குப் பேச வேண்டாம்” என்றும் முதல்வர் கண்டிப்புடன் கூறியதாக சொல்கிறார்கள். இத்தோடு நில்லாமல் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தைக் கூறுவதற்காக சில மூத்த அமைச்சர்களை நியமிக்கவுள்ளனராம். அவர்கள் தான் இனி கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிடுவார்களாம்.


அது மட்டுமல்ல. "உள்ளாட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்ட இடங்களுக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது.. திமுக கைப்பற்றிய இடத்தில் நாம துணைத் தலைவர் பதவியையாவது புடிச்சாகணும்.. அப்பதான் அவங்களுக்கு நெருக்கடி தரமுடியும். அதனால நாம ஜெயிக்கறதுக்கு என்ன பண்ணணுமோ அதை செய்யுங்க.. மீடியாவில் பேசுறதை குறைங்க.. ஒழுங்கா வேலையப் பாருங்க” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


எப்படியோ பிரச்சினை இல்லாமல் போனால் சரித்தான். திமுகவும் இப்படித்தான் தனது தலைவர்களுக்கு கடிவாளம் போட்டு வைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம். ஆனால் இந்த பாஜகவுக்குத்தான் கடிவாளமே போடாமல் வைத்துள்ளனர். ஆளாளுக்கு என்னென்னமோ பேசுகிறார்கள். அவர்களும் இதேபோல கட்டுப்பாடு காத்தால் நல்லாத்தான் இருக்கும்.


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்