போக்குவரத்து எஸ்.ஐ. மற்றும் கூடுதல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ்

சென்னை புளியந்தோப்பில் இளைஞரை மண்டையை போக்குவரத்து எஸ்.ஐ. உடைத்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் வாகன தணிக்கையில் 18ம் தேதி ஈடுபட்டபோது, ஹெல்மெட் அணியாமல் வந்த ஓட்டேரியை சேர்ந்த சுரேந்தருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.


அப்போது வாக்குவாதத்தின்போது கட்டையால் இளைஞரின் மண்டையை ரமேஷ் உடைத்தார். இதை கண்ட வாகன ஓட்டிகள், ரமேசை சிறைபிடிக்கவே, தகவலின்பேரில் அங்கு வந்த போலீஸார் மீட்டு சென்றனர்.


பத்திரிகை செய்தியை அடிப்படையாக வைத்து, சென்னை போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் அருண், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், சம்பவம் தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.