கருத்துவேறுபாடுகளைவெளிப்படுத்துபவர்களைதேசவிரோதிகள்ளன்பது சரியானது அல்ல. உச்சநீதிமன்றநீதிபதி

 


அரசுக்கு எதிராக கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துபவர்களை தேசவிரோதிகள் என குறிப்பிடுவது சரியானது அல்ல என உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனநாயகமும், கருத்து வேறுபாடும் என்ற கருத்தரங்கில் பேசிய அவர், ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு என்பது விலைமதிப்பற்ற உரிமை என்றார்.


பெரும்பான்மை என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்ற அவர், அரசை விமர்சிப்பவரை நாட்டுக்கு எதிரானவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார். அரசின் நிலைப்பாடு எப்போதுமே சரியானதாக இருக்க முடியாது என்றும், மக்களுக்கு அமைதியாக போராடவும், எதிர்ப்புக் கருத்துக்களை வெளிப்படுத்தவும் உரிமை மற்றும் சுதந்திரம் அவசியம் என்றும் அவர் கூறினார்.


குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டாதால் அது ஜனநாயகம் வெற்றி பெற்றதாக கருத முடியும். மாற்றுக் கருத்தும் எதிர்ப்பும் தான் ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம். அதை அங்கீகரித்து, ஊக்குவிக்க வேண்டும். தேசவிரோத வழக்கு சுமத்தவர்க்கு ஆதரவாக வாதிடமாட்டோம் என்று கூறிய தீர்மாணம் நிறைவேற்றிய வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.


இந்த அரசியலைமைப்பு சட்ட நெறிமுறைகளுக்கு விரோதமானது. சில தீர்ப்புக்கள் மீது எனக்கு உடன்பாடில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதுமட்டுமின்றி, நீதித்துறை அச்சமற்று, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.


நீதித்துறை கூட விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல” என தெரிவித்தார்.கருத்துவேறுபாடுகளை ஒடுக்குவதோ, அவமதிப்பதோ ஜனநாயகத்தில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்