அச்சம் என்பது, மடமையடா

வாழ்க் ழ்க்கையில் எப்போதோ ஒரு முறை மரணத்தைச் "சந்திக்கிறவன் வீரன். மரணத்திற்கு மத்தியில் எப்போதோ ஒருமுறை வாழ்க்கையைச் சந்திக்கிறவன் கோழை. இந்தியா வீரர்களின் பூமியாக இருந்தது. இன்று கோழைகளின் சிறைக் கூடமாக இருந்து தொலைக்கிறது. இது அவமானப்பட வேண்டிய அசிங்கம்.


மொகலாயப் படை எடுப்பையும் அதன்பின் நடந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து அடிமைத்தனம் மக்கள் மனத்தில் வேரூன்றிவிட்டது. இந்த மண்ணின் மானப்பசை காய்ந்துவிட்டது. காயடிக்கப்பட்ட மாடு களைப்போல ஆண்மை அழிந்தொழிந்த அடிமைப் புத்திக்காரர்களாக இந்திய ஜன சமூகம் இருந்தும் இறந்து கிடக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு என்பதை விட பிணநாயக நாடு என்றே எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது.


கூச்சம் இல்லாமல் கூட்டணி மாறும் அரசியல் வியாபாரிகள், தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தொவு செய்த கட்சிக்கும் துரோகம் இழைக்கும் அரசியல் வியாதிகள், ஊழலே உருவமான பல தலைவர்கள், உழைக்காமல் பிழைக்கும் பல அரசு ஊழியர்கள், * அரசியல் வெறியர்களின் அராஜகம், அக்கிரமத்திற்கு அரசு எந்திரத்தைக் கூட்டிக் கொடுக்கும் சில மானம் கெட்ட அதிகாரிகள், வாதியும், பிரதிவாதியும் செத்த பிறகு தீர்ப்புச் சொல்லும் அதிமேதாவித்தனமான நீதி நியாயங்கள், எடை குறைவான ரேஷன், கண் எதிரில் கற்பழிப்பு, பேட்டை தாதாக்களின் ரவுடித்தனம், லஞ்சம், வஞ்சம், அநீதி, அநீதி அக்கிரமம், அநியாயம் எதுவுமே இன்று இந்தியரைப் பாதிக்கவில்லை . மாறாகப் பயந்து சாகிறார்கள்.


அன்றைய பாரத புத்திரர் “சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்'' என்று பாரதி பாடினார். இன்றும் அவனே போலீஸைக் கண்டு அஞ்சுகிறான். பண்ணையாரைக் கண்டு பயந்து நடுங்கிய காலம் போய் பாரத புத்திரன்பணத்தாசை பிடித்த பல அதிகாரிகளைப் பார்த்துப் பயப்படுகிறான்.


“அச்சம் என்பது மடமையடா'' என்று கையைக் காலை ஆட்டி யாராவது பாடினால் கையைத் தட்டுகிற தமிழ்நாட்டு மக்கள், அராஜகத்தின் முன்னால் கையைக் காலைக் கட்டிக்கொண்டு பயந்து சாகிறார்கள்..! பயம்... பயம்... பயம்... இதிலிருந்து வெளியே வா இந்தியனே..! வெற்றி நிச்சயம்.


ஒரு ரயில் நிலையத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். நான்கைந்து பிளஸ்டூ மாணவர்கள் என்னைக் காட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சன் டி.வி.யில் பார்க்கிற, தினமணி கதிரில் எழுதுகிற சுகி. சிவம் நான்தானா என்று அவர்களுக்குச் சந்தேகம். ஆனால் என்னிடம் வந்து பேசப் பயம்.


நானே அவர்களை அருகில் அழைத்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைப் பார்த்துப் பேச ஏன் பயப்பட வேண்டும்? இளைய பாரதத்தைப் பார் பார்த்து எனக்குக் கவலையாக இருக்கிறது. கொஞ்ச நோக்கிங்கப் பிறகு வா நேரத்திற்குப் பிறகு ஒரு மாணவன் தயங்கித் தயங்கி autograph கேட்டான்.


பொதுவாக நான் autograph வாங்குவதை விரும்பு வதில்லை . அதனால் எந்தப் பயனும் இல்லை என்பது என் கோட்பாடு. இருந்தும் அவனைக் காயப்படுத்தாமல், தமப் aur “தம்பி autograph வாங்குபவனாக இராதே... அவசியம் என்றால் போடுகிறவனாக இரு” என்றேன்.


இதைவிட அந்த இளைஞனுக்கு நான் வேறு நல்லது என்ன சொல்ல முடியும்? மாணவன் முகம் வாடிவிட்டது. இன்றைக்கு மாணவர்கள் ஆசிரியரோடு பேசப் பயப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் பேச அதிகமாகவே பயப்படுகிறார்கள்.


பயப்படாதே! ஆங்கிலத்தைச் சரியாகப் பேச முயற்சிசெய். தவறாக இருந்தாலும் கவலைப்படாதே... பேசு... அது அந்நிய மொழி. அதைச் சரியாகப் பேசாவிட்டாலும் குற்றம் இல்லை. யாராவது இந்தியருக்கு ஆங்கிலேயர் செய்த குற்றங்களோடு ஒப்பிட்டால் இது மிகச் சிறியது!


தவறைச் சுட்டிக் காட்டினால் வெட்கப்படாதே... நன்றி சொல். பிழையின்றி ஆங்கிலம் பேச அவர் உனக்கு உதவ முடியுமா என்று கேள். மகாத்மா காந்தியின் ஆங்கிலத்தில் ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரி பிழை கண்டபோது காந்தி அப்படித்தான் உதவி கேட்டார்.


அப்படிக் கேள். உருப்படுகிற வழியைப் பார்...பயப்படாதே... வீரனாகவே இரு! அடிக்கடிச் சாகாதே! ஒரு முறைதான் சாக வேண்டும். எவ்வளவு பெரிய மனிதரைப் பார்க்க நேர்ந்தாலும் துணிவுடன், நேராகப் பார். குழப்பம், தலைகுனிதல், தயக்கம், பயம், உளறல் இவற்றைத் தூக்கிக் குப்பையிலே போடு.


இளையபாரதமே ஜெயிக்கிற வழியைப் பார். ஔரங்கசீப் டில்லி பாதுஷாவாக இருந்த போது அம்பர் என்கிற சின்ன நாட்டிற்கு ஜெயசிங் என்கிற பதின்மூன்று வயதுச் சிறுவன் பட்டத்திற்கு வந்தான். அவனைப் பயமுறுத்தி வைக்கும்எண்ணத்தில் டில்லிக்கு வரும்படி பணித்தார் பாதுஷா. அவனது தாயும் அமைச்சர்களும் அஞ்சினர். ஆனால் சக்கரவர்த்தி முன்பு நடந்துகொள்ள வேண்டிய மரபுகள், முறைகளைக் கேட்டறிந்து ஜெய்சிங் டில்லி சென்றான். /சிங்கக் குட்டியைப் போல் தன் முன் வந்து நின்ற ஜெய்சிங்கை ஔரங்கசீப் உற்றுப் பார்த்தார்.


நம்மைக் கண்டு இவனுக்குப் பயம் வரவில்லையே என்று கோபம் அடைந்த பாதுஷா, சிம்மாசனத்தில் இருந்து திடுமென்று குதித்து ஜெய்சிங் அருகில் வந்து அவன் கைகளைப் பிடித்தார். பற்களை நறநற என்று பயமுறுத்தும் பாணியில் கடித்தார். ஜெய்சிங் அஞ் சவில்லை . அசரவில்லை ! ஔரங்கசீப் ஆச்சர்யம் அடைந்தார்.


ஜெய்சிங் கைகளை இறுக்கியபடி, “சிறுவனே உனக்குப் பயமாக இல்லையா? இப்போது நான் உன்னைத் தண்டித்தால் என்ன செய்வாய்? எப்படிக் காப்பாற்றிக் கொள்வாய்?'' என்றார். ஜெய்சிங் சிரித்துக் கொண்டு, “இத்தனை பெரிய டில்லி பாதுஷாவே என் கைகளைப் பிடித்து எனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும்போது நான் எதற்குப் பயப்பட வேண்டும்? யாரிடம் பயப்பட வேண்டும்?” என்று சாமர்த்தியமாகப் பதில் கூறினான்.


அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, “பலே'' என்று பாராட்டி பக்கத்தில் ஆசனம் அள ஆசனம் அளித்தார் ஔரங்கசீப் என்கிறது வரலாறு! அச்சத்தை வென்றால் வெற்றி நிச்சயம்.


நன்றி! தன்முனைப்பு பேச்சாளர் தத்துவ பேச்சாளர் சுகி.சிவம் அவர்களின் ‘வெற்றி நிச்சயம்' நாலிலிருந்து ருந்து எடுக்கப்பட்டது. '


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்