பா.ஜ.க-வினர் தாக்குதல் - கைகட்டி வேடிக்கை பார்த்த போலிஸ்” : டெல்லியில் வன்முறை!

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஷாஹீன்பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இஸ்லாமிய பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், ஷாஹீன்பாக்கை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களுக்கு திடீரென போராட்டம் பரவ தொடங்கியுள்ளது.


அதன்படி வடகிழக்கு டெல்லியில் முக்கிய சாலையான யமுனா விகார்டன் சாலையில் 1500க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை இரவு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், ஆம் ஆத்மியில் இருந்து தாவி பா.ஜ.கவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரத்து பேரணிக்கு ஏற்பாடு செய்தார். அப்போது பேரணியில் ஈடுபட்ட சில பா.ஜ.க ஆதரவாளர்கள் சிஏஏ-விற்கு எதிராக போராடுபவர்களை நோக்கி கற்களை வீசி தாக்கியுள்ளனர்.


இந்ததாக்குதலினால் ஆத்திரமடைந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இருதரப்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அந்த இடம் போர்களம் போன்று காட்சியளித்தது.


இந்த தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே பாதுகாப்பில் இருந்த போலிஸார் கட்டுப்படுத்தாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


பின்னர் தாக்குதல் பெரும் வன்முறையாக மாறியதையடுத்து அங்கு போலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரம் ஏற்படுத்தியவர்களை துரத்தி அடித்தனர்.சில இடங்களில் பா.ஜ.கவினர் தாக்குதலில் இருந்து போலிஸாரை சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் காப்பாற்றி உள்ளார்கள்.


போலிஸார் இருக்கும் இடத்திலேயே பா.ஜ.கவினர் இதுபோல தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆனாலும், சிஏஏ எதிர்ப்பாளர்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் தொடர்ந்து தள்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.


இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது. ஜப்ராபாத் தவிர, சீலாம்பூர், மவுஜ்பூர் மற்றும் சாந்த் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் தற்போது போராட்டம் துவங்கியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு