மனிதன்” : பாகுபாட்டை எதிர்த்துப் போராடிய சீனஇளைஞர்

சீன நாட்டின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸால் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.


கொரோனா வைரஸின் கோரத் தாக்குதலால் சீனா நிலைகுலைந்து போயுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.


இதனையடுத்து, இலங்கை உள்ளிட்ட நாடுகள் சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. மேலும், சீனாவிலிருந்து திரும்பும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என பரிசோதித்து கொரோனா பாதிப்பு இல்லை என தெரிந்த பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர்.


கொரோனா வைரஸ் சீன மக்களிடமிருந்து தங்களுக்கு பரவி விடுமோ என சிலர் அச்சப்பட்டு அவர்களிடையே பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஒருசில நாடுகளில் சீனர்களுக்கு விடுதிகளில் தங்குவதற்கு அறை வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்நிலையில், இத்தாலியில் சீன இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தொடர்பாக சீன மக்கள் மீது காட்டப்படும் பாகுபாட்டை எதிர்த்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.


மார்டிக்லி ஜியாங் என்கிற சீன இளைஞர் ஃபிரென்ஸெ நகரில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில், ”நான் வைரஸ் அல்ல; நான் மனிதன்; தவறான எண்ணவோட்டத்தைக் கைவிடவும்” என எழுதிய பதாகையை அருகில் வைத்துக்கொண்டு துணியால் கண்ணையும், வாயையும் மூடிக்கொண்டு நின்றார்.


சிலர் ஜியாங்கைத் தாண்டி நடந்தாலும், பலர் அவரை ஆரத்தழுவிக் கொண்டனர், மேலும் சிலர் அவரது முகத்தில் இருந்த துணியை அகற்றினர். சீன மக்கள் மீது காட்டப்படும் பாகுபட்டை எதிர்த்து போராடிய ஜியாங்கை பலரும் பாராட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு