மாணவிகளை உள்ளாடைகளை கழற்ற வைத்து மாதவிடாயை பரிசோதித்த கல்லூரி நிர்வாகம்...!

68 கல்லூரி மாணவிகளை உள்ளாடைகளை அகற்றச் சொல்லி, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா..? இல்லையா..? என்று கல்லூரி நிர்வாகம் சோதனை செய்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் ஸ்ரீசஹ்ஜானந்த் இன்ஸ்ட்டியூட் என்ற கல்வி நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டு முதல் இந்த கல்லூரியில் சுமார் 1500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் கட்டுப்பாட்டில் விடுதி ஒன்றும் இயங்கி வருகிறது.


இந்த விடுதியில் 68 மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த மாணவிகள் அனைவருமே தொலைதூரத்தில் உள்ள குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிலையில், விடுதியில் நடந்த ஒரு சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பலரும் சமையலறைக்கு செல்வதாகவும், கல்லூரி வளாகத்தில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாக புகார்கள் எழுந்தன.


இது தொடர்பாக முதல்வருக்கு விடுதி நிர்வாகம் வழியாக புகாராக அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, விடுதியில் தங்கியிருந்த 68 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.


அதாவது, 68 மாணவிகளில் யார், யார் மாதவிடாய் காலங்களில் இருக்கின்றனர் என்று முதல்வர் மற்றும் விடுதி நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து 2 பேர் ஒதுங்கியிருக்கின்றனர்.


அதன்பிறகும் நம்பாத கல்லூரி நிர்வாகத்தினர், எஞ்சியிருந்த 66 பேரை கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் உள்ளாடைகளை அகற்றச் செய்து, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என்று சோதனை நடத்தி உள்ளனர்.


கல்லூரி நிர்வாகத்தின் இந்த கேவலமான செயல் தற்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொறுப்பு துணைவேந்தர் ஒருவர் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார்.


எனினும், மாணவிகளை கல்லூரி நிர்வாகம் நடத்தியவிதம் மனித உரிமை மீறல், இந்த மோசமான செயலைச் செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு