வீதிக்கு வாங்க ரஜினி... மனுஷ்யபுத்திரன் நைய்யாண்டி.

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கைகளும், பேட்டிகளும் அளித்துவிட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை அது தொடர்பாக எந்தக் கருத்தையும் கூறவில்லை.


இதனிடையே ரஜினி நடிகராக மட்டும் இருந்துவிட்டால் அவருடைய கருத்தை அறிய யாரும் ஆவலுடன் இருந்திருக்க மாட்டார்கள். இன்னும் சில மாதங்களில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதால் தான் அவருடைய கருத்தை இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த்தை நைய்யாண்டி செய்யும் வகையில் எழுத்தாளரும், உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனருமான மனுஷ்யபுத்திரன் ஒரு சிலேடை வெளியிட்டுள்ளார்.


அதில் வெயில் குறைந்து விட்டது வீதிக்கு வாங்க ரஜினி என அழைத்துள்ளார்.
ரஜினிகாந்த் தொடர்பாக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் வரிகள் பின்வருமாறு;வீதிக்கு வாங்க ரஜினிமுதல் ஆளாக இல்லாவிட்டாலும்க கடைசிஆளாகவாவது.


நீங்கள்காண போய்விட்டீர்கள் என்றும் கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும்தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும்ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனஇன்னும் நீங்கள்


அமைதியாக இருப்பது நல்லதல்ல
வீதிக்கு வாங்க ரஜினி


வெய்யில் குறைந்து
அந்தி சாய்ந்துவிட்டது
மாலை நடை மூப்புக்கு நல்லது
கடல் காற்று சுவாசத்திற்கு நல்லது
சாலையோர தேநீர் கடையில்
இஞ்சி டீ தலை சுற்றலுக்கு நல்லது
வீதிக்கு வாங்க ரஜினி
கதவைத்திற காற்றுவரட்டும்
என்றார் நித்தி
நீங்கள் ' கேட்' டைத்திறங்கள்
'மைக்'குகள் ' கேட்' டிற்கு வெளியே
உங்களுக்காக தவமிருக்கின்றன
இஸ்லாமியர்களுக்கு
நீங்கள் சொன்னபடி ஒன்றல்ல
நூறு அடிகள் விழுந்துவிட்டன
இன்னும் ஏன் தயங்குகிறீர்கள்?


வீதிக்கு வாங்க ரஜினி
போராட்டக்காரர்களிடையே
சமூகவிரோதிகள் புகுந்துவிட்டார்கள்
என்பதுதானே உங்கள் அடுத்த டயலாக்?
அதை எவ்வளவு நேரம் மனப்பாடம் செய்வீர்கள்?


ஆனால் அதை இந்த முறை
எப்படிச் சொல்வதெனக் குழம்புகிறீர்கள்
ஏனெனில் எந்தத் தீவிரவாதியும் புகமுடியாதபடி
போராடுகிறவர்கள் எல்லோருமே தீவிரவாதிகள்
குல்லாபோட்ட தீவிரவாதிகள்
முக்காடிட்ட தீவிரவாதிகள்
வீதிக்கு வாங்க ரஜினி
நீங்கள் துடிப்பாக நடந்துவருவதைக்காண
எங்களுக்கும் மிகவும் பிடிக்கும்
உங்கள் துருப்பிடித்த மூளையைப்போலவே
உங்கள் துடிப்பும்
இந்த வயதிலும் மாறாமல்
அப்படியேதான் இருக்கிறது
எதையாவது பேசுங்கள்


அரசரின் ரத்தக்கறை படிந்த பூட்ஸ்களை
இன்னொருமுறை கழுவுங்கள்
நீங்கள் உங்கள் ரசிகனின் மாமிசத்தை
விற்பவர் என்பதையும்
உங்களையே எந்தக் கூச்சமும் இல்லாமல்
விற்றுக்கொள்பவர் என்பதையும
இன்னொருமுறை உலகிற்கு காட்டுங்கள்


வீதிக்கு வாங்க ரஜினி
வீதியில்தான் மக்கள் இருக்கிறார்கள்
வீதியில்தான் நீதி இருக்கிறது
வீதியில்தான் அன்பு இருக்கிறது
வீதியில்தான் சத்தியம் இருக்கிறது


மனுஷ்ய புத்திரன்
மேற்கண்டவாறு சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற தடியடி குறித்து கருத்துக்கூற ரஜினிகாந்துக்கு மனுஷ்யபுத்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)