பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது - ஏ.கே விஸ்வநாதன்
காவல் துறையின் சீறிய செயல் பாட்டினால் இந்தியாவிலேயே சென்னை பாதுகாப்பான நகரமாக திகழ்வதாக, மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த 10 ஆண்டுகளாக எந்த குற்றச்சாட்டும் இல்லாமல், சிறப்பாக செயல்பட்ட 568 காவலர்களுக்கு ஏ.கே விஸ்வநாதன் விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், காவலர்கள் எஜமானர்கள் அல்ல சீர்திருத்த வாதிகள் என்ற மகாத்மா காந்தியின் கூற்றுக்கு நிகராக விளங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.