நெஞ்சுல அடிச்சு இழுத்துட்டு போனாங்க” : போலிஸாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போலிஸார் நடத்திய தடியடியை கண்டித்து, ஏராளமான இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். இதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.


மேலும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்களையும் போலிஸார் கொடூரமான முறையில் தாக்கியதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், “SOS செயலி பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்னு போலிஸ் சொன்னாங்க.


அதே போலிஸ் தான் உரிமைக்காக போராடின பெண்கள் நெஞ்சுல அடிச்சு இழுத்துட்டு போனாங்க. எந்த போலிசும் எங்க பாதுகாப்புக்கு வரல. பெண்கள் மேல ஆண் போலிஸ் எப்படி கை வைக்கலாம். போலிசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” எனத் தெரிவித்தார்.


காவல்துறையினரின் தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றது.


சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்தும் சிஏஏ-வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்