விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஜய்-க்கு நேரில் சம்மன் அளித்தனர்.

நெய்வேலி என்.எல்.சி சுரங்கப் பகுதியில் மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துவந்தனர்.


சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 22 இடங்களில், காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். தி.நகர் ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, 'பிகில்' படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான ஆவணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆவணங்களின் அடிப்படையில், நடிகர் விஜய்யிடம் விசாரிக்க வருமான வரித்துறை டீம் முடிவு செய்திருக்கிறது.


நடிகர் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்' படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி சுரங்கப் பகுதியில் நடந்துவருகிறது. இதனால், ஷூட்டிங் முடிந்தபிறகு நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஐ.டி தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.


ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே நேரடியாகச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய்யைத் தங்கள் காரிலேயே சென்னைக்கு அழைத்துவந்துள்ளனர். நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என விசாரித்தோம். 'மாஸ்டர்' ஷூட்டிங் நடந்துவரும் என்.எல்.சி 2வது சுரங்கப் பகுதிக்கு இன்னோவா கார் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் டீம் வந்தது. தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும் நடிகர் விஜய்யைப் பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த சி. ஐ.எஸ்.எஃப் படை வீரர்கள், அவர்களை அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர், என்.எல்.சி உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று, ஷூட்டிங் நடந்த பகுதிக்கு அவர்கள் சென்றனர்.


ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விஜய்க்கு சம்மன் அளித்து, சிறிதுநேரம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கூடுதலாக விசாரிக்க வேண்டி இருப்பதாகக் கூறி, தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். அதற்கு விஜய், ஈவ்னிங் ஷூட்டிங் முடிந்ததும் நேராக வருகிறேனே?' என்று பதிலளித்திருக்கிறார். ஆனால், தங்களுடன் உடனே வருமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.


இதையடுத்து, தன்னுடைய காரில் வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளை முன்னால் செல்லும்படியும் விஜய் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், தங்கள் காரிலேயே வரும்படி அழைத்திருக்கிறார்கள். இதனால், அவர்கள் வந்த இன்னோவா காரிலேயே விஜய் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்" என்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்