பாலியல் தொழிலுக்காக சிறுமியை வாங்கிவந்த அழகுநிலைய உரிமையாளர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உமராபாத் கூட்டுறவு சங்கத் தலைவரும், அதிமுக பெண் பிரமுகருமான பிரேமா, தனது மகளை பாலியல் தொழிலாளியாக மாற்றிய பெங்களூரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய் லதா ஆகியோரை அந்த இளம்பெண்ணின் புகாரின் கீழ் காவல்துறை டிசம்பர் 31ந்தேதி கைது செய்தது.


இந்நிலையில் பெங்களுரூவில் இருந்து 17 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக வாய்மொழி அக்ரிமெண்ட் மூலம் அழைத்து வந்த, வேலூர் அடுத்த காட்பாடியில் அழகுநிலையம் வைத்து நடத்தி வந்த லட்சுமி, தலைமறைவாக இருந்தார். அவரை ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் தேடிவந்தனர்.


இந்நிலையில் பிப்ரவரி 9ந்தேதி லட்சுமியை போலீஸார் கைது செய்தனர். அவரை நீதிபதியின் வீட்டில் நிறுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வாணியம்பாடியை சேர்ந்த முக்கிய பெண் புரோக்கரான அஜிஸ்சை போலீஸார் தேடிவருகின்றனர். அவன் சிக்கிய பின்பே மூவரிடம் தீவிரமாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் போலீஸார்.