சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அவலநிலை..!

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் உள்ளே நுழைந்த உடன் அவசரசிகிச்சை பிரிவில் நோயாளிகளை ஏற்றி செல்லும் ஊழியர்கள் (வாட் பாய்) 50 அல்லது 100 ரூபாய் கொடுக்க வேண்டும்.


அவசர சிகிச்சை செய்யும் போது ரத்தம் வருவதை சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களுக்கு 100 ரூபாய். லிப்ட்டில் ஏரி செல்லும் போது அவருக்கு 20 அல்லது 30 ரூபாய் கொடுக்க வேண்டும்.


வார்டுக்கு சென்றவுடன் நோயாளிகள் பெட் போர்வை மாற்றுவதற்கு கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அங்கு இருக்கும் கடைசி நாள் வரை பெட் போர்வை மாற்ற மாட்டார்கள்.


அப்படி பணம் கொடுத்து மாற்ற சொன்னாலும் அந்த பேட் போர்வையை அந்த நோயாளி தான்மாற்ற வேண்டும் கை அல்லது கால் உடைந்து வரும் நோயாளிகள் ரத்த கசிந்தால் அதையும் அந்த நோயாளிதான் சுத்தம் செய்ய வேண்டும் வார்டில் சுத்தம் என்பதே கிடையாது சுகாதாரம் இல்லாமல் இருக்கும் போர்வைகள் அதை மாற்றுவதே கிடையாது கட்டில் மேல் உள்ள பெட் கிழிந்து நார்கள் மட்டும் தான் இருக்கிறது.


சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டிய மருத்துவமனை ஊழியர்கள் மனசாட்சி இல்லாமல் நடப்பது வேதனைக்குரியது. பல உயிரை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் இருக்கும் போது சில ஊழியர்களால் மருத்துவ துறைக்கே களங்கம். இதுபோன்ற ஊழியர்களை கண்டு நடவடிக்கை எடுக்கப்படுமா?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்