ஜெயக்குமாரை நம்பினால் அரசு வேலை வாங்கி கொடுப்பார்.. சிபிசிஐடியை அதிர வைத்த சித்தாண்டி.

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்புடைய காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.


டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் ராமேஸ்வரம் கீழக்கரை தேர்வு மையத்தை தேர்வு செய்து முறைகேடுகள் நடந்தது குறித்து சென்னை காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் சித்தாண்டி என்பவரை போலீசார் நேற்று ராமநாதபுரத்தில் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூர் கிராமத்தைச் சேர்ந்தவரான காவலர் சித்தாண்டி, அரசு வேலை புரோக்கர் ஜெயக்குமாருடன் இணைந்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் மோசடி செய்து கடந்த சில ஆண்டுகளில் 100க்கணக்கான நபர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.


பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது.. பல பேருக்கு தொடர்பு உள்ளது.. டிஎன்பிஎஸ்சி முறைகேடு பற்றி உதயநிதி! டிஎன்பிஎஸ்சி தேர்வு ஏனெனில் சித்தாண்டியின் மனைவி பிரியா குரூப்2 தேர்வில் தமிழகத்தில் 5வது இம் பிடித்தார், சித்தாண்டியின் தம்பி வேல்முருகன் குரூப் 2 தேர்வில் தமிழகத்தில் 3வது இடம் பிடித்தார். வேல்முருகன் மனைவி குரூப் 2 தேர்வில் தமிழகத்தில் 6வது இடம் பிடித்தார். சித்தாண்டியின் தம்பி கார்த்தி குரூப் 4 தேர்வில் தமிழகத்தில் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். இது தவிர டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த திருவராஜ் , சித்தாண்டியின் சொந்த ஊரான பெரிய கண்ணூரைச் சேர்ந்தவர் ஆவார். சித்தாண்டி கைது இதன் காரணமாகவே சித்தாண்டியின் மீது போலீசாருக்கு சந்தேக பார்வை விழுந்தது.


அவரை நேற்று ராமநாதபுரத்தில் போலீசார் கைது செய்து கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. இதனிடையே சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. வெற்றிக்கு உதவினார் சித்தாண்டி சிக்கியதால் அவர் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.


காவலர் சித்தாண்டி சிக்கிய நிலையில் அவரது மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து சித்தாண்டி அளித்த தகவலில் சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் தான் பலருக்கு அரசு வேலையை வாங்கித்தந்தாராம். இருவரும் இணைந்து கமிஷன் அடிப்படையில் பல லட்சங்களை சம்பாதித்தது தெரியவந்தள்ளது. ஜெயகுமார் தான் சித்தாண்டியின் மனைவியை டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வைக்க உதவியதுடன், சென்னையில் போஸ்டிங் வாங்கி கொடுக்க உதவினாராம்.


கமிஷன் கொடுத்துள்ளார் டிஎன்பிஎஸ்சி வேலைக்காகத் தன்னை அணுகுபவர்களை சித்தாண்டி அண்ணாநகரில் உள்ள குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச்சென்று ஜெயக்குமாரை அறிமுகப்படுத்தி வைப்பாராம். ஜெயக்குமார் அவருக்கு கமிஷன் கொடுப்பாராம். ஜெயக்குமாரை நம்பினால் அரசு வேலை வாங்கிகொடுப்பார் என்ற நம்பிக்கையால் தான் அவருக்கு புரோக்கராக செயல்பட்டதாகவும், மற்றபடி தனக்கு வேறு விவரங்கள் தெரியாது என்றும் கூறியிருக்கிறாராம்.


இதனால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். முடிச்சுகள் அவிழும் இதனிடையே சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமாரை பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். தலைமறைவாக உள்ள ஜெயக்குமாருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது. எதில் எல்லாம் முறைகேடு நிகழ்த்தினார். அப்படி பணியில் சேர்ந்தவர்கள் யார் என்பது போன்ற விவரங்கள் முழுமையாக வரும் என்பதால், அப்போது பல முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)