கொரோனா வைரஸ்... தற்காத்துக்கொள்வது எப்படி..

மனிதர்களை அவ்வப்போது வைரஸ்கள் எனும் நுண்ணியிரிகள் தாக்கி சேதங்களை உருவாக்குவது வரலாற்று காலத்தில் இருந்து நடந்து வரும் விசயமாகும். இந்த வைரஸுகள் குறிப்பிட்ட சில விலங்குகளிடம் இருந்து தனது பாதையை மாற்றிக்கொண்டு வீரியமிக்கதாக மனிதனைத் தாக்கும். முதல் உலகப்போர் காலத்தின் போது ஐரோப்பாவை இன்ப்ளூயன்சா வைரஸ் தாக்கியது நினைவிருக்கலாம். பல கோடி உயிர்களைக் காவு வாங்கிய வைரஸ் அது.


அந்த வைரஸ் ஒவ்வொரு நான்கு சகாப்தங்களுக்கு ஒருமுறை தன்னை தகவமைத்துக்கொண்டு வந்து தாக்கும். அதுபோலவே இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்த SARS படையெடுப்பு (Severe Acute Respiratory Syndrome) இதுவும் சீனாவில் இருந்து வந்தது தான்.


பலரது உயிரைக்காவு வாங்கியது. சமீபத்தில் கேரளாவைத் தாக்கிய நிஃபா வைரஸ், இப்போது சீனாவின் ஆஹான் எனும் 1.1 கோடி பேர் வாழும் நமது சென்னைக்கு நிகரான ஊரில் இருந்து கிளம்பி இருக்கும் பூதம் தான் ‘கொரோனா' வைரஸ்!


இந்த பூதம் அங்கு உண்ணப்படும் பாம்பு வெரைட்டிகளில் இருந்து வந்திருப்பதாக கூறப்படுகிறது. எப்போதும் மனிதனை தாக்கி சீக்கிரமே மரணம் உண்டாக்கும் வைரஸ்களில் ஒரு ஒற்றுமை உண்டு. அவை நமது சுவாசப் பாதையை தாக்குவதுதான், கொரோனா வைரசும் நம் சுவாசப்பாதையை தாக்குகிறது. வைரஸ் காய்ச்சலின் போது வரும்


1. தொண்டை வலி


2. வறட்டு இருமல்


3. சளி


4. மூக்கடைப்பு


5. தும்மல்


6. காய்ச்ச ல்


7. மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும்.


சுவாசப்பாதையை தாக்குவதால் மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்குஎளிதில் இருமுவதாலும் தும்முவதாலும் பரவும். இந்த வைரஸ் தாக்கும் அனைவருக்கும் மரணம் நேர்வதில்லை .


இருப்பினும் 379 முதல் 40% மரண சதவிகிதம் இருப்பதால் அதிகமான முன்னெச்சரிக்கை தேவைப்படுகிறது. நுரையீரல் செயலிழப்பு மூலம் மரணத்தை உண்டாக்குகிறது இந்த வைரஸ்.


இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெறுவது முக்கியம். இந்த வைரஸால் ஏற்படும் நிமோனியாவுக்கு வைரஸ் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.


செயற்கை சுவாசம் தேவைப்பட்டால் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீரிழப்பை ஈடு செய்வது. உடல் உஷ்ணத்தை சரிசெய்வது போன்ற சிகிச்சைகள் இந்த நோய்க்கு உண்டு.


நோய் வந்தபின் உழல்வதை விட வருமுன் காப்பதே நல்லது. நமது மாநிலத்திற்குள் கடல் வழி / சாலைகள் வழி / நீர் வழி சீனர்கள் / சீனாவில் வியாபாரம் செய்து திரும்புபவர்கள் வந்தார்களேயானால் அவர்களை நோயின் அறிகுறி தோன்றும் நாட்களான மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தி பிறகு பரிசோதனைகள் செய்து நமது மாநிலத்துக்குள் விடலாம்.


இதை Quarantine என்போம். சீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான சிங்கப்பூர் / மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் மக்களை ரேடாரில் வைக்க வேண்டும்.


நோய் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தலாம் (Isolation). சளி இருமல் தொண்டை வலி போன்றவற்றை நாம் லேசாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை பார்க்கலாம். மெடிக்கல் சாப்பில் நமக்கு நாமே மருத்துவம் பார்த்துக்கொள்ளாமல் இருக்கலாம் சளி இருமல் இருப்பவர்கள் கைகளில் கைக்குட்டை வைத்துக்கொண்டு அதில் இருமலாம். தும்மலாம்.


சத்துணவு சாப்பாடு போன்றவை நமது எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். நமது மாநிலத்தை விட்டு மிகத் தேவையான காரணமன்றி செல்லாமல் இருப்பது நல்லது சீனா.. ஜப்பான்... தாய்லாந்து.. இன்னும் சீனர்கள் அதிகம் இருக்கும் சிங்கப்பூர் / மலேசியா போன்ற நாடுகளுக்கு இப்போதைக்கு செல்வதை தவிர்க்க வும். சிங்கப்பூர் / மலேசியா நாடுகளில் இருக்கும் நம் உறவுகள் கூடுதல் அலர்ட்டாக இருக்கவும்.


கொரனா வைரஸிடம் அலர்ட்டாக இருக்க வேண்டியது நமது பொறுப்பு. எங்கோ சீனாவில் தானே என்று இருக்க முடியாது. இன்றைய உலகில் காலை சீனாவில் காபி குடித்து விட்டு மாலை சென்னையில் நடக்கும் ரிசப்சனுக்கு வந்துவிடலாம். மேலும் சீனர்கள் அதிகமாக இருக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நமது மக்கள் அதிகம்.


சீனாவிற்கு மலேசியாவும் சிங்கப்பூரும் தலைவாசல் கொல்லை வாசல் போல... சிங்கப்பூர் மலேசியா வாழ் தமிழ் சொந்தங்களுக்கு தமிழ்நாடும் மலேசிய தீபகற்பமும் தலைவாசல் கொல்லை வாசல் போல... இப்போது புரிகிறதா நாம் எவ்வளவு அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று...


மனிதர்கள் வேகமாக நாடுவிட்டு நாடு பறப்பது போல தொற்று நோய்களும் வேகமாக பரவிவிடும் எனவே அதிகமான எச்சரிக்கை உணர்வு தேவை. அச்சம் தேவையில்லை !!


அதிகமாக தண்ணீ ர் பருகலாம். விட்டமின் சி நிரம்பிய ஆரஞ்சு / லெமன் போன்ற பழங்களை உண்ண லாம். தினமும் எட்டு மணிநேரம் உறக்கம். நல்லஇப்போது புரிகிறதா நாம் எவ்வளவு அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று... மனிதர்கள் வேகமாக நாடுவிட்டு நாடு பறப்பது போல தொற்று நோய்களும் வேகமாக பரவிவிடும் எனவே அதிகமான எச்சரிக்கை உணர்வு தேவை. அச்சம் தேவையில்லை !!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்