பண்ருட்டி நகராட்சி குப்பைகளைத் தரம் பிரிக்கப்படாமல் சுடுக்காட்டில் கொட்டப்படும் அவலம்!

பண்ருட்டி நகராட்சிக்கு கெடிலம் ஆற்றாங்கரையோரத்தில் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் நகராட்சி 33 வார்டுகளில் உள்ள குப்பைகளை இந்த இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.


இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் குப்பைகளைக் கொட்டுவதற்கு தனியாக இடம் இருந்தும் அந்த இடத்தில் குப்பைகளைக் - கொட்டப்படுவதில்லை. ஆனால் இந்த இடத்தில் சுடுகாடு, கரும காரியம் கொட்டகை, குடிநீர் போர் மற்றும் சலைவை தொழிலாளர்கள் துணிகளை சலவை செய்தல் ஆகியவை உள்ளது. மேலும் தை மாதத்தில் ஆற்று திருவிழா நடைபெரும்.


இந்த இடத்தின் அருகில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, குடிருப்பு பகுதி ஆகியவை உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நகராட்சி அனைத்து வார்டுகளில் உள்ள குப்பைகளை எடுத்து வந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் இடம் குப்பை மேடாக காணப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடம் இல்லாமல் இருப்பதால் மாற்று இடத்தில் புதைத்து வருகிறார்கள். மேலும்குப்பைகளைக் கொளுத்தி விடுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு மூச்சு திணரல் ஏற்படுகிறது.


மேலும் மழைக்காலங்களில் குப்பைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில் குடிநீர் போர் இருப்பதால் கழிவு நீர் சேரும் நிலையில் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலையில் உள்ளது.


மேலும் குப்பைகளைத் தரம் பிரிக்காமல் கொட்டப்படுவதால் பாலீத்தின் கவர்களை மாடுகள் தீவனமாக எடுத்து கொள்கிறது. இதனால் பசும்பால் வாங்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


எனவே நகராட்சி குப்பைகளை முறையாக தரம் பிரித்து இதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைகளைக் கொட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் நமது விஜிலென்ஸ் பத்திரிகை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றுமா என பொதுமக்களோடு சேர்ந்து நாமும் பொறுந்திருந்து பார்ப்போம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு