வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த பாஜக நிர்வாகியைக் கையும் களவுமாக பிடித்த மனைவி
வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவனை அவர்கள் தங்கியிருந்த பிளாட்டுக்கு சென்ற மனைவி கையும் களவுமாக பிடித்து சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோவில் பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் தேசிய நிர்வாக உறுப்பினராக இருப்பவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவருக்கும் அனு என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே ஸ்ரீகாந்த் தியாகி சமூகஆர்வலரான மாண்ட்வி சிங் என்ற பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாக அவரது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஸ்ரீகாந்தை பின்தொடர்ந்து சென்று பார்த்த போது அவர் மாண்ட்வி சிங் உடன் தனியாக பிளாட்டில் இருந்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தியாகி - மாண்ட்வி சிங் தங்கியிருக்கும் பிளாட்டுக்கு சென்ற அனு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றி பெண்கள் இருவரும் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாண்ட்வி சிங் மீது அனு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது மாண்ட்வி சிங் தனக்கு மேலதிகாரிகள் பலரிடம் செல்வாக்கு உள்ளதாக போலீசாரை மிரட்டி உள்ளார்.
இதனையடுத்து மாண்ட்வி சிங் - அனு இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீகாந்த் தியாகி இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் உள்ளார்.