குழந்தைகளுக்கும் பாடங்களை கற்றுக் கொடுங்கள்!

குழந்தைகளை பொறுத்தவரை சிறுவயதில் இருந்தே அவர்கள் மனதில் பதியும் எண்ணங்கள் தான் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். பொதுவாக ஒரு குழந்தையை பள்ளியில் சேர்த்துவிடும் வரை ஆர்வமாக பல விஷயங்கள் சொல்லிக் கொடுப்போம்.


ஆனால் சேர்த்த பிறகு நம் பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் பள்ளி தந்து விடும் என்று எண்ணி நம் வேலைகளை கவனிக்க தொடங்கி விடுவோம். பள்ளியில் மொழி, கணிதம், வரலாறு, அறிவியல் என்று பொதுவாக உள்ள பாடங்களை சொல்லித் தருகிறார்கள்.ஆனால் வாழ்க்கை சீராக அமைய பலபல விஷயங்கள் தெரிந்திருக்கவும் வேண்டுமே!


இவைகளை எல்லாம் பள்ளிகளில் கற்றுதருவார்கள் என்று எதிர்பார்க்கவும் கூடாது, கற்றுத்தரவும் முடியாது. ஏனெனில் ஓவ்வொரு குழ்ந்தையின் மன நிலையும் ஒவ்வொ ருமாதிரியாக இருக்கும். அவரவர்களுக்கு ஏற்றது போல் சொல்லிக் கொடுப்பது என்பது சாத் தியப்படாதது. அத னால்தான் அவைகளை பெற்றோர்கள் சொல்லி வளர்க்க வேண்டியது முழு முதற்கடைமையா கிறது.


டாக்டர், இஞ்சினீயர் என்று எந்த தொழிலை தேர்ந்தெடுக்க போகி றாம் என்பது அக்குழந் தைக்கு வெகு நாளைக்கு பிடிபடாது. ஆனால் "எது செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும்; செய்வன திருந்தச் செய்ய வேண்டும்” “ஏமாற்றி முன்னேறக் கூடாது.


"பிறரை கீழே தள்ளி முன்னேறக்கூடாது”, "எது செய்தாலும் என் மனசாட்சிக்கு உட்பட்டு செய்ய வேண்டும்”, குடும்பத்தின் வாழ்வா தாரத்தை உயர்த்த வேண்டும்” என்பது போன்ற தொலை நோக்கு பார்வையுடன் நிர்ணயிக்கும் இலக்குகள் தாம் வாழ்க்கை கோட்பாடுகள். இந்த கோட்பாடுகள் தான் ஒவ்வொரு குழந்தையின் அடித்தளம். இந்த அடித்தளத்தை வலுவாக போட நாம் கை கொடுத்தோம் என்றால் அதைவிடப் பெரிய சொத்து எதுவும் இல்லை.


தவறு செய்வது மனித இயல்பு. யாரும் இங்கு அனைத்தையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. ஆனால் தவறு செய்தால் அதிலிருந்து கற்ற பாடத்தை மறக்கவே கூடாது. அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று குழந்தைகளுக்கு புரிய வைக்கலாம்.


ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒளிந்திருக் கும் தனித்தன்மையை வெளிக்கொணர வைபப்து ஒவ்வொரு பெற்றோரின் கடமையா கும். அதாவது, ஓவியம் வரைவது, கதை கவிதை எழுதுவது, ஹைகூ எழுதுவது, நகைச் சுவையாக பேசுவது என ஒவ்வொரு தனித்தன் மைகள் இருக்கும்.


குழந்தைகளிடம் பேசும்போது தன்னை அவர்களுக்கு சரிசமமாக நினைத்து பேசிப் பழக வேண்டும். குழந்தைகள் இன்றைய காலக்கட்டத்தில் தற்காப்புக் கலை கற்பது மிக அவசியம். அவர்களுக்கு மனதளவில் சுய பச்சாதாபம், அமைதியின்மை இருந்தால் உளவியல் நிபுணரையோ தாய் தந்தையையோ அணுக வழிகாட்ட வேண்டும்.


அதோடு எப்போது கவனிக்க வேண்டும்? எப்போது பேச வேண்டும்? எப்படி எதிரா ளியிடம் அணுக வேண்டும்? என்பதெல்லாம் ஒருவருக்கு வாழ்க்கையில் சுனாமியோ பொன்மழையையோ தரக்கூடிய விஷயங்கள். எனவே சிறு வயது முதலே நீங்கள் எங்கே சென்றாலும் அவர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள்.


எவ்வளவு சொன்னாலும் பழகாத பிள்ளை, நீங்கள் செய்வதைப் பார்த்து "டக்” என்று புரிந்து கொள்ளும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் நாம் சரியாகத்தான் பழகுகிறோமா என்ற சுயபரிசோதனையை முன்னரே செய்து விடுங்கள்.


வாழ்க்கை பாதை கரடுமுரடானதுதான். அதை தைரியமாக எதிர்கொள்ள தயார்ப்படுத் துதல் அவசியம். தோல்வியை கண்டு துவளாமல், எதிரியைக் கண்டு பதறாமல், துரோகம் கண்டு கலங்காமல் வஞ்சகம் கண்டு நடுங்காமல் வாழ முதலில் பெற்றோர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு, பிறகு குழந்தைகள் மனதில் நிலைநிறுத்த வேண்டும்.


ஒரு விஷயத்திற்காக உழைக்கிறோம் என்றால் தடைகள் தாண்டி வெற்றி பெற மனஉறுதி மிக அவசியம். மனஉறுதி இருந்தால் தான் இறுதிவரை போராடி வெற்றி பெறலாம். எனவே இதுபோன்ற நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கும் இதுபோன்ற வாழ்வியல் பாடங்களை கற்றுக் கொடுக்க பழகுங்கள்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு