மாவட்ட ஆட்சியர் அவர்கள் தயவு செய்து உடனடியாக பழுதடைந்த பாலத்தை பார்வையிட்டு புதிய பாலம் அமைக்க படுமா...

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் சின்ன ஏரியை ஒட்டியுள்ள பாலம் ஒன்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெய்த மழையில் பாலம் பழுதடைந்து அந்தரத்தில் தொங்கியபடியே உள்ளது.


இதனால் இப்பகுதியில் செல்லும் பேருந்துகள் தட்டுதடுமாறி செல்கின்றது.  இதுகுறித்து தினமலர்,  தினமணி. தினகரன்  ஆகிய நாளிதழில் தெளிவான விவரங்களுடன் செய்தி வந்துள்ளது.


அதன் பிறகு பஞ்சாயத்து சார்பாக ஒரு நாள் பழுதடைந்த பாலத்தை பார்வையிட்ட பிறகு வெயில்காலம் வரட்டும்  அதன் பிறகு முடிந்தால் பார்க்கலாம் என்று கூறி விட்டு சென்றனர்.  


அதன் பிறகு இது நாள் வரை மேற்படி பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்க வில்லை.  தற்சமயம் ஏரியில் தண்ணீர் இல்லை.


எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தயவு செய்து உடனடியாக பழுதடைந்த பாலத்தை பார்வையிட்டு புதிய பாலம் அமைக்கும்  பணிகளை ஆரம்பிக்க சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு பொது நலன்கருதி கேட்டுக்கொள்ள படுகிறது.