திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பட்ட வீதி உலா கொடி பட்ட வீதி உலா...!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை காலை துவங்கவுள்ள மாசித்திருவிழாவை முன்னிட்டு வியாழனன்று பட்ட வீதி உலா நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு
வியாழக்கிழமை மாலை வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் முதலியார் பன்னிரண்டாம் திருவிழா மண்டபத்தில் வைத்து கொடி பட்ட வீதி உலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்