ஆக்ஸிடண்ட்டா ... பணம் கொடுக்காதீர்கள்!
உங்கள் பைக்கோ, காரோ ஓட்டிக்கொண்டு Thபோய் ஆக்ஸிடண்ட் செய்து விட்டீர்கள் என்றால், அடுத்து இறங்கி சண்டை நடக்கும். அந்த ஆசாமி 'காச் மூச்' என்று கத்தி ரிப்பேர் செய்ய இவ்வளவு ஆகும் என்று சொல்லி பணம் கேட்பார். பேரம் பேசி பலர் பணம் கொடுக்கிறார்கள்.
ஆனால் தவறு உங்கள் பக்கமே இருந்தாலும் நீங்கள் பணம் கொடுக்க வேண்டியதில்லை. “உங்களுக்கு இன்ஷூரன்ஸ் யதில்லை. உங்களுக்கு இன்வான்ஸ் இருக்கு இல்ல? க்ளெயிம் பண்ணிக்கோங்க” என்று சொல்வதுதான் சட்ட ரீதியான தீர்வு.
போலீஸ் வந்து பஞ்சாயத்து செய்தாலும், பணம் கொடுக்கத் தேவையில்லை. போலீஸில் சிலர் மிரட்டச் செய்யலாம். ‘ராஷ் டிரைவிங்'குன்னு கேஸ் போடுவேன் என்றெல்லாம் சொல்லக்கூடும். ஆனால் பயப்படாதீர்கள்.
“நான் என் லாயரிடம் பேசிட்டு எதுவா இருந்தாலும் சொல்றேன்" என்று சொல்லுங்கள். கேஸ் போட்டு கோர்டுக்குப் போனால் ஜட்ஜ் ஐயா திட்டி விடுவார். உங்கள் நம்பரை கொடுத்து விட்டு அந்த இடத்தில் இருந்து அகலுங்கள்.
அந்த வண்டி ஆக்ஸிடெண்டால் உருக்குலைந்தே போயிருப்பினும் சட்டப்படி நாம் பணம் கொடுக்கத் தேவையில்லை. ஆக்ஸிடன்ட் நடந்த இடத்தில் நின்று கொண்டு சண்டை வளர்க்காதீர்கள்.
இடித்த வண்டியில் ரௌடிகள், அரசியல்வாதி, குண்டர்கள் இருந்தால், பதமாகப் பேசி அங்கிருந்து சென்று விடுங்கள். "அண்ணே இப்ப கைல சுத்தமா காசு இல்ல...
என் நம்பர் தரேன். வீட்டுக்குப்போயி பேசிட்டு பாத்துக்கலாம்" என சொல்லி நைஸாக எஸ்கேப் ஆக வேண்டும். இங்கே ரூல்ஸ் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. என்கிட்ட இன்ஷூரன்ஸ் இல்லை என்று சிலர் சொல்லக்கூடும்.
அப்படியா ? அப்ப போலீஸ் மொதல்ல உங்களைத்தான் பிடிக்கும் என்று சொல்லுங்கள். சிலர் இன்ஷூரன்ஸ் க்ளெயிமுக்கு மேல காசு செலவாகும் அதைக் குடுங்க என்பார்கள். அது உனக்கும் இன்ச்ஜூரன்ஸ் கம்பனிக்குமான பிரச்சனை என்று ஆரம்பித்து, முதலில் இன்ஷூரன்ஸ் க்ளெயிமை முடிங்க .
அதிகம் எவ்ளோ வருதுன்னு பாத்துட்டு பேசிக்கலாம் என்று கூறி சென்று விட்டீர்கள் என்றால் , 90 சதவீதம் அவர்கள் அழைக்க மாட்டார்கள். | அந்த இடத்தின் பிரஷரைக் குறைத்து அங்கிருந்து அகல வேண்டும். அவ்வளவுதான் மேட்டர். Accident is an unexpected incident. It is not a crime!