சோபனாபுரம் டாஸ்மாக்கில் கொள்ளையடிக்கும் ஊழியர்கள்

தமிழ்நாட்டில் முதன்முறையாக டாஸ்மாக் மூலம் சரக்கு விற்பனையை அறிமுகப்படுத்தியவர் நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. முன்பு மதுபான கடையை தனியாரிடம் ஒப்படைத்து அதன் மூலம் நிகர லாபத்தை அரசு அனுபவித்து வந்தது. ஆனால் தற்போது அரசே ஏற்று நடத்துவதால் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் என்கிற நிலையில் அதில் வேலை செய்யும் ஊழியர்கள் பல மோசடிகளில் தனி வருமானம் ஈட்டி வருகிறார்கள். அதுவும் தமிழ்நாட்டின் மைய பகுதியான திருச்சி மாவட்டம் முழுவதுமே. அரசு அறிவிப்பு மூலம் பல ஆயிரங்களைக் கொடுத்து டாஸ்மாக்கில் வேலை வாங்கிய இவர்கள் லாபம் அடைய தற்போது அரசை ஏமாற்றி பல வழிகளில் கொள்ளையடித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக சில அரசு அதிகாரிகள் இருப்பதும் தான் வேதனை.


திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சோபனாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் தான் பயங்கர தில்லாலங்கடி வேலைகள் நடைபெறுகிறது என குடிமகன்கள் நமக்குத் தொலைபேசியில் புகார்கள் தெரிவித்ததால் உடனடியாக நமது புலன் விசாரணையைத் தொடங்கினோம். அப்போது நமக்குக் கிடைத்தத் தகவல்கள் அப்படியே தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழக காவல் துறைக்கும்


திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சோபானா புரத்தில் அரசு மேல் நிலை பள்ளி அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. கடை எண் 10579 இங்கு சூப்பர்வைஸ்சராக கௌதம்சேல்ஸ்மேனாக கண்ணன் வேலைப் பார்க்கிறார்கள். இவர்களின் அராஜகத்திற்கு அளவே இல்லை. இவர்கள் என்ன விலை சொல்லுகிறார்களோ அது தான் விலை. மீறி குடிமகன்கள் யாராவது கேட்டால் நீங்கள் கேட்ட சரக்கு இல்லை எனக் கூறி விரட்டி விடுகிறார்கள். அரசு நிர்ணித்த விலையை விட ஒரு பாட்டில ஒன்றுக்கு 10 ரூபாய் 20 ரூபாய் அதிகமாக விற்கிறார்கள்.குளிர்ந்த பீர் வகைகளுக்கு 20 ரூபாய் அதிகமாக வைத்து பகிரங்கமாக கொள்ளையடித்து வருகிறார்கள். இது குறித்து நமது நிருபர் கேள்வி கேட்ட போது ஆமாம் நாங்கள் அப்பிடிதான் விற்போம் எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது


நாங்கள்மாதந்தோறும் காவல்துறைக்கும் மதுவிலக்கு காவல்துறைக்கும் டாஸ்மாக் மேலாளர் அவர்களுக்கும் கரெட்டா மாமுல் தந்து கொண்டு இருக்கிறோம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எங்கள் மீது புகார் கூறினாலும் ஏதுவும் நடக்காது. புக்கில் செய்திகள் போட்டாலும் ஒன்றும் நடக்காது மேலும் ஆளும் கட்சியினர் எங்களுக்கு மிகவும் ஆதரவாக உள்ளார்கள் என்று திமீராகவே பதில் அளித்தனர். விடுமுறை நாட்களில் இக்கடையில் பகிரங்கமாக மது விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கிறது.


சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் காரணமாக டாஸ்மாக்குக்கு விற்பனை விடுமுறை விட்டாலும் இந்த கடைக்கு மட்டும் விடுமுறையே இல்லை. 24 மணி நேரமும் இங்கு சரக்கு வாங்கி கொள்ளலாம் விலை 40 முதல் 100 ரூபாய் வரை அதிகம் அவ்வளவு தான் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வரை பகிரங்கமாக சம்பாதிக்கிறார்கள். மாதத்தில் எவ்வளவு என்று நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள்.


விடுமுறை நாட்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். இக் கடையில் சைடில் விற் கப்படும் எந்த சரக்கும் சுத்தமாக இல்லை அதில் கலப்படம் செய்து தான் விற்கிறார்கள் எவ் வளவு குடித் தாலும் போதையே வருவது இல்லை என்கிறார்கள். நாளை விடுமுறை என்றால் முதல் நாளே மொத்தமாக அருகில் எடுத்து வைத்து அதிக விலைக்கு விற்கிறார்கள்


அப்பிடி விற்கப்படும் சரக்குகள் தண்ணீர் கலந்து விற்க படுகிறதா இல்லை பாண்டிசேரி சரக்கா ஒன்றுமே புரியவில்லை என்று புலம்பி செல்லுவது காவல்துறையின் காதுகளுக்கு மட்டும் கேட்க வில்லையா?


இந்த கடை ஊழியர்களிடம் மாதந்தோறும் மாவட்ட மேலாளர் துரைமுருகன் மதுவிலக்கு ஆய்வாளர் சுமதி உப்பிலியபுரம் துணை காவல் ஆய்வாளர் ஆகியோர்களுக்கு மாமூல் தருகிறோம் என்று இவர்கள் கூறுவது உண்மையா? என்று. இவர்கள் தான் தெரிய படுத்த வேண்டும் இவர்கள் மாமூல் பெற வில்லை என்றால் இக்கடையின் மீதும் ஊழியர்களின் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை . ? இக்கடை ஊழியர்கள் செய்யும் தவறுகளை மதுவிலக்கு ஆய்வாளர் அவர்களிடம் கூறினோம்


ஆனால் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை ஆனால் எப்போதும் கேட்டாலும் ரெய்டுக்கு செல்லுகிறேன் செல்லுகிறேன் என்கிறார்கள் ஆனால் நடவடிக்கை மட்டும் பூஜ்ஜியம். சோபனாபுரத்தில் உள்ள டாஸ்மாக்கடையில் வேலை பார்க்கும் சூப்பர்வைசர் விற்பனையாளர் ஆகியோர் பகிரங்கமாக நாங்கள் மாதந்தோறும் ஆளும்கட்சியினருக்கும் டாஸ்மாக் மேலாளர் மதுவிலக்கு ஆய்வாளர் உப்பிலியபுரம் காவல்துறைக்கும் அவர்கள் மாமூல் என்கிற லஞ்சம் கொடுத்து வருவது உண்மையா?


மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் இவர்களிடம் லஞ்சம் வாங்குவது உண்மையா? இதில் எது உண்மை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.'


மேலே குறிப்பிட்டு உள்ளவர்களின் துணை யோடு தான் மேற் சொன்ன டாஸ்மாக் ஊழியர்களின் அராஜா கங்கள் புரிந்து வருகிறார் களா ? இவர்கள் மீதுகுறிப்பாக மதுவிலக்கு துறை கண்காணிப் பாளராக இருக்கும் நேர்மையின் சிகரம் டாக்டர் வடுகம் சிவக் குமார் ஐபிஎஸ் அவர்களும் ஹானஸ்ட் துறையூர் இன்ஸ் பெக்டர் குருநாதன் அவர்களும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குடிமகன்களின் கோரிக்கை. நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)