ஷாகீன் பாக்; மகனை இழந்த தாய் நஸியா பங்கேற்பு!

டெல்லியில் தேர்தல் நடக்கும் நிலையில் அங்கு நடக்கும் சிகிகி எதிர்ப்பு போராட்டங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லியில் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி CAA எதிரான போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.


இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும். ஷாஹீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை இங்கு தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்தியாவில் நடக்கும் CAAக்கு எதிரான போராட்டத்திற்கு இது மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது.


இந்த போராட்டத்தை பெண்கள்தான் நடத்தி வருகிறார்கள். தினமும் ஷாஹீன் பாக் பகுதியில் 2 லட்சம் பேர் வரை இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.


இந்த போராட்டத்தை குடும்ப பெண்கள்தான் முன்னின்று நடத்தி வருவது. டெல்லியின் மிக கடுமையான குளிருக்கும் இடையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி CAA போராட்டத்தில் எல்லோரின் செல்லப்பிள்ளை என்றால் அது முகமது ஜஹான்தான். 4 மாதமே வயது நிரம்பிய முஹம்மது ஜஹான், அங்கு போரட்டம் செய்யும் மக்களுக்கு செல்லப்பிள்ளை.


முஹம்மது ஆரிப் மற்றும் நஸியாவின் மகனான முஹம்மது ஜஹான், டிவியில் கூட வந்திருக்கிறான்.கையில் தேசிய கொடியை பிடித்துக் கொண்டு, கன்னத்தில் தேசிய கொடியை வரைந்து கொண்டு முஹம்மது ஜஹான் நிற்கும் புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலானதும் குறிப்பிடத்தக்கது.


தனது மகன் முஹம்மது ஜஹான் உடன் நஸியா தினமும் போராட்டத்தில் கலந்து கொண்டார். எப்போதும் கலந்து கொண்டார். எப்போதும் முஹம்மது ஜ ஹான் உடன் நஸியாவின் வருகைக்காக அங்கு போராட்டக்காரர்கள் பலர் காத்து இருப்பது வழக்கம். இந்த நிலையில் இனி " போராட்ட களத்திற்கு முஹம்மது ஜஹான் வர மாட்டான் என்று நசியா தெரிவித்துள்ளார்.


போராடிய காரணத்தால், முஹம்மது ஜஹானுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது குளிர் காய்ச்சலாக மாறி. 4 மாதமே ஆன காரணத்தால் காய்ச்சலாக மாறி, 4 மாதமே ஆன காரணத்தால் போதிய எதிர்ப்பு சக்தி இல்லாமல், முஹம்மது ஜஹான் கடந்த வாரம் பலியானான்.


ஆம் வெறும் 4 மாத குழந்தை, சிகிகி எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு, அதன் மூலம் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக பலியாகி உள்ளான்.இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் நஸியா மீண்டும் போராட்டக்களத்திற்கு திரும்பி உள்ளார். மகனை இழந்த பின்பும், தன்னுடைய கோரிக்கையில் மிகவும் வலுவாக இருந்து, மீண்டும் போராட்டம் செய்ய நசியா திரும்பி உள்ளார்.


என் மகனுக்காகநான்தான் போராடுவேன்.எனக்கு இருக்கும் மீதம் உள்ள இரண்டு குழந்தைகளை காக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்திற்காக நான் கண்டிப்பாக போராடுவேன், என்று நசியா குறிப்பிட்டுள்ளார்.


சிகிகி NR சி இரண்டும் வந்தால் நாங்கள் இந்த நாட்டை இழக்க நேரிடும். நாங்கள் குடியுரிமையை இழக்க நேரிடும். அதை நாங்கள் நடக்க விட மாட்டோம். நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம். அதற்காக நாங்கள் போராடுவோம். இந்த அரசு மக்களை பிரித்து ஆட்சி செய்ய நினைக்கிறது.


அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று நஸியா குறிப்பிட்டுள்ளார். இதே போன்று ஷமிதா காத்தூன் என்னும் 57 வயதான பெண்மணி கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் நடை பெற்று வந்த போராட்டங்களில் தினமும் கலந்து கொண்டிருந்தவர் உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். கல்கத்தாவின் ஷாஹீன் பாக் என்று இந்த போராட்டம் அறியப் படுகிறது. பெண்களால் நடத்தப் படும் இந்தப் போராட்டத்தில் ஷமிதா முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்.


இது வரை இருபதுக்கும் மேற்பட்டோர் உத்தர பிரதேச மாநிலத்தில் சுட்டுக் கொல் லப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் இரண்டு பேரும், அஸ்ஸாமில் மூவரும் காவல்துறையால் கொல் லப்பட்டுள்ளனர். டெல்லியில் ஷஹீன் பாக்,ஜாமியா மில்லியா ஆகிய இடங்களில் 3 முறை இந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் துப்பாகக சூடு நடததயு இதில் மாணவர் ஒருவர் காய மடைந்துள்ளார். எத்துணை அடக்கு முறை, கொலை வெறி தாக்குதல்களை ஆளும் பயங்கரவாதிகள் நடத்தினாலும் தொடர்ந்து போராட்டங்கள் நடக்கும் என்பதில் போராட்டக்காரார்கள் உறுதியாக உள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)