ராஜேந்திர பாலாஜியிடம் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார், முதல்வர்.உங்களது பதவி பறிக்கப்படும்

ரஜினி தொடங்கி பா.ஜ.க பிரமுகர் கொலைவரை சர்ச்சையான கருத்துகளுக்குச் சொந்தக்காரர் எனப் பெயர் எடுத்திருந்த ராஜேந்திரபாலாஜி, முதல்வர் கொடுத்த ஷாக் ட்ரீட்மென்டால் அமைதியாகிவிட்டார் என்கிறார்கள். அப்படி என்னதான் ஷாக் கொடுத்தார்? ராஜேந்திரபாலாஜி அமைதிக்கு என்ன காரணம் என அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.


பெரியார் குறித்து ரஜினியின் பேச்சுக்குப் பதில் கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை , தற்போது அடங்கியிருக்கும் சூழலில், திருச்சியில் பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் சர்ச்சையான கருத்துகளைப் பேசி மீண்டும் பெரும் புயலைக் கிளப்பினார். தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இதுகுறித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, "இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கையில் பிடித்துக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.


இப்படியே இந்துக்களைக் கொல்லும் வேலையைத் தொடர்ந்தார்கள் என்றால், பிரச்னை வேறுவிதமாகச் செல்லும். மேலும், இந்துக்களைக் கொல்லும் இயக்கத்துக்கு தி.மு.க துணை போனால், இந்து பயங்கரவாதம் உருவாவதைத் தடுக்க முடியாது" என்றார். அதைத் தொடர்ந்து, "இஸ்லாமியர்கள் வாழக்கூடிய தெருக்களில் முன்பெல்லாம் அ.தி.மு.க-வுக்கு பாதிக்குப்பாதி ஓட்டு விழுந்தது. இப்போது பத்து ஓட்டுகூட கிடைப்பதில்லை. இளைஞர்களை மூளைச் சலவை செய்கிறார்கள்.


ஆயுதம் ஏந்தவைக்கிறார்கள்" என்று கூறி பரபரக்கவைத்தார். அவரது இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தது. அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரி தி.மு.க தமிழக ஆளுநரிடம் மனு அளித்துள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஜேந்திர பாலாஜி தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தார். பின்னர், நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பால்வளத்துறைக்கான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.


அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்பே, ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி நடந்துகொள்கிறார். நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் இப்படிப் பேசினால் என்ன அர்த்தம்? தொடர்ந்து இப்படியே பேசிக்கொண்டிருந்தால், கண்டிப்பாக உங்களது பதவி பறிக்கப்படும்' என்று ராஜேந்திர பாலாஜியிடம் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார் முதல்வர். அந்தக் கூட்டம் முடிந்தபின்பு நிருபர்கள் அவரைச் சுற்றிநின்று கேள்விகள் கேட்கத் தொடங்கினர். அதற்கு ராஜேந்திர பாலாஜி, "என்னிடம் அரசியல் பற்றி கேட்காதீர்கள். அரசியல் கருத்துகளைக் கூறவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனவே, என்னை விட்டுவிடுங்கள். துறைரீதியாக வேண்டுமானால் கேள்வி கேளுங்கள்” என்று கூறியிருக்கிறார். பின்னர், துறைரீதியான கேள்விகளுக்கு மட்டும் அவர் பதில் அளித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்