பட்ஜெட் மீதான விவாதம்: பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி

பட்ஜெட் மீதான விவாதம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழக அரசு எப்போதெல்லாம் புதிய திட்டங்கள் அறிவிக்கிறதோ, அப்போதெல்லாம் உறுதியாக கடன் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.


வருவாய் வந்தாலும் அரசுக்கு வட்டி கட்டுவதற்கே போய்க்கொண்டிருக்கிறது. மக்களுக்கு எந்த திட்டங்களும் முறையாக போய் சேருவதில்லை. கடன் சுமையைக் குறைப்பதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.


நாங்கள் ஒன்றும் மத்திய அரசிடம் ஒட்டி உறவாடவில்லை! - துரைமுருகன் வாதம்
நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க, வேளாண் மண்டக்லத்துக்கு மத்திய அரசிம் அனுமதி வாங்கி தர வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததை தி.மு.க வரவேற்பதாகவும், அதே நேரம் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியப்பிறகு அறிவித்திருந்தால் வரவேற்றிருப்போம் என்றார்.


இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், அ.தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என தி.மு.க-வினர் கடந்த காலங்களில் விமர்சித்தனர். தற்போது தி.மு.க அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்கள் தான் மத்திய அரசிடம் வாதிட்டு, வேளாண் மண்டலத்துக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கூறினார்.


அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், நீங்கள் அறிவிப்பீர்கள், நாங்கள் அனுமதி பெற்று தர வேண்டுமா என கேள்வி எழுப்பினார். மேலும் அ.தி.மு.கவை போல நாங்கள் மத்திய அரசிடம் ஒட்டி உறவாட வில்லை, எதிரும் புதிருமாக இருக்கிறோம் என பதிலளித்தார்.


பட்ஜெட் உரை மீதான விவாதம் தொடங்கியது !
தி.மு.க சார்பில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்,


மதுரை விமான நிலையத்தில் ரன்வே பகுதியில் போதுமான விளக்குகள் இல்லை என்றும் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அதை விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். அதை இந்த ஆண்டிலாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளாட்சி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினாலும் எந்த திட்டமும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு!
முதலமைச்சரின் விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தி.மு.க வெளிநடப்பைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு!
முதலமைச்சரின் விளக்கத்தை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லாததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் தடியடி ஏன் நடைபெற்றது? - அபூபக்கர் கேள்வி
இதுவரை பேணிப் பாதுகாக்கப்பட்ட நல்லிணக்கம் இனிமேலும் பேணி பாதுகாக்க வேண்டும். இது முஸ்லிம்களுக்கு மட்டும் பாதிக்கப்படக்கூடிய சட்டமில்லை. ஒட்டுமொத்தமாக இந்திய இறையாண்மைக்கு பாதிக்கக்கூடிய சட்டம்.


அமைதியான வழியில் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்த தடியடி என்பது ஏன் நடைபெற்றது, அந்த சூழ்நிலையை ஏற்படுத்திய அதிகாரி யார்? - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் கேள்விசிஏஏ-வுக்கு எதிராக பேச அனுமதி மறுப்பு!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பில்லை. - சபாநாயகர்மக்களின் போராட்டத்தை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்! - கே.ஆர். ராமசாமி
காங்கிரஸ் சார்பில் பேசிய கே.ஆர். ராமசாமி, “ குடியுரிமை சட்டத்திருத்தத்தை தீர்மானமாக கொண்டு வர காலதாமதம் செய்கிறீர்கள். போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்களின் போராட்டத்தை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். மத்திய - மாநில அரசுகள் மக்களின் எண்ணம் என்ன என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.


சென்னையில் நடந்த தடியடி போல் வேறு எந்த இடத்திலும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக தீர்மானமாக சட்டமன்றத்தில் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்தார்.சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - மு.க.ஸ்டாலின்


CAA-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவேண்டும் - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினர்.


டெல்லியை போல தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான வழியில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் காவல்துறையை தூண்டிவிட்டு தடியடி நடத்தி விட்டு அதற்கு யார் காரணம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும்!
கன்னியாகுமரி தொகுதி தடிக்காரன்கோணம் ஊராட்சி வீரபுளி கிராமத்தில் உள்ள மக்கள் நான்கு கிலோமீட்டர் நடந்துதான் பகுதிநேர நியாய விலை கடை செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் தமிழக அரசு தனது விதியை தளர்த்தி அங்கே புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என கன்னியாகுமரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கேள்வி கேள்வி நேரத்தின் போது கேட்டுக்கொண்டார்.பள்ளிகளை தரம் உயர்த்த மக்களிடம் பணம் பெறக் கூடாது!
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசுகையில், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு பொதுமக்களிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பெறுவதை விதிவிலக்கு செய்ய வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. அதிலிருந்து நிதியை ஒதுக்கவேண்டும் . தற்போது பள்ளிக்கல்வித் துறைக்கு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களிடமிருந்து பணம் பெறாமல் அரசே அந்த தொகையை ஏற்க முன்வர வேண்டும் எனக் கோரினார்.உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றவேண்டும்!
கீழ்பெண்ணாத்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி பேசுகையில், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ஓராண்டிலேயே 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றினார். பல கிராமங்களில் டவுன்பஸ் அதிகமாக இல்லாததால் அதிகமானவர்கள் நெடுந்தூரம் செல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது அதனால் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றுவதற்கு துரிதமாக செயல்பட வேண்டும் எனப் பேசினார்.


காவல்துறை அத்துமீறலைக் கண்டித்து பதாகை!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறை அத்துமீறலைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பதாகை ஏந்தி நுழைந்தார்.பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!
பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சார்பில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாதவரம் சுதர்சனம் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி உள்ளிட்டோர் பேச உள்ளனர்.தி.மு.க தலைவர் சட்டப்பேரவைக்கு வருகை!
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை வந்தார்.பேரவை மீண்டும் 17-ம் தேதி கூடும் - சபாநாயகர்
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை நிறைவு செய்தவுடன் பேரவை மீண்டும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்