சீனாவுக்கு கொரோனா; அமெரிக்காவுக்கு இன்ஃபுளூயன்ஸா!

சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் மற்றொரு வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வைரஸால் அமெரிக்காவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 10,000 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


'இன்ஃபுளூயன் ஸா ஏ' என அறியப்படும் இந்த வைரஸ் ஹெச்1என்1 வகையைச் சேர்ந்தது. `கொரோனா மற்றும் இன்ஃபுளூயன்ஸா ஏ' ஆகிய இரு வைரஸ்களுக்கும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக இருக்கின்றன. இன்ஃபுளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடக்கத்தில் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் கோளாறு ஆகியவை ஏற்படுகின்றன. பின்னர், அதிகமான காய்ச்சல், நிமோனியா மற்றும் இருதய செயலிழப்பு ஆகியவை ஏற்பட்டு மரணத்துக்கு வழிவகுக்கிறது.


அமெரிக்காவின் நவம்பர் டிசம்பர் பருவகாலங்களில் வழக்கமாக ஏற்படும் இந்த வைரஸ், இந்தமுறை சற்று முன்கூட்டியே வைரஸ் உளதாகவு வைரஸ் இதுவதம் பரவத் தொட பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் இதுவரை 19 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளதாகவும் 60 குழந்தைகள் உட்பட 10,000 பேர் இதனால் இறந்துள்ளதாகவும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


மருத்துவமனைக்கு வருபவர்களில் 5.7% சதவிகிதம் பேருக்கு இன்ஃபுளூயன்ஸா வைரஸுக்கான அறிகுறி இருப்பதாக அமெரிக்காவின் இன் ஃபு ளூயன் ஸா கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது . அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இந்த வைரஸ் அதிகமாகப் பரவி வருவதாகவும் கண்காணிப்புக் குழு கூறுகிறது.


சி.டி.சி எனும் கண்காணிப்பு குழுவின் தலைவர் லின்னெட் ப்ராம்மர் இதுதொடர்பாகப் பேசும்போது, கடந்த காலங்களில் இன்ஃபுளூயன்ஸா பி' வைரஸின் தக்கத்தைப் பார்த்திருக்கிறோம். இப்போது, ஹெச்1என்1 வகையைச் சேர்ந்த இன்ஃபுளூயன்ஸா ஏ' வைரஸின் தாக்கத்தைப் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது தெரியவில்லை. அனால், கடந்த வாரத்தைவிட இந்த வாரம் இதன் பாதிப்பு அதிகமாகியுள்ளது” என்று கூறினார்.


அமெரிக்காவிலுள்ள தனியார் மருத்துவ ஆய்வுக்குழு ஒன்றின் தலைவர் கிரேகோரி போலந்து இந்த வைரஸ் குறித்து பேசுகையில், மிகவும் ஆபத்தான இந்த வைரஸ், கணிசமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஆண்டுதோறும் பருவகாலங்களில் வரும் இந்த வைரஸால் 10,000, 20,000 மற்றும் 30,000 என்ற கணக்கில் மக்கள் இறக்கின்றனர். ஆனால், இதைக் கவனத்தில் எடுக்க மறுக்கிறார்கள். இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போட வேண்டும் மற்றும் முறையான சிகிச்சைகள் எடுக்க வேண்டும்" என்றார்.


மேலும், தற்போது பரவுகின்ற 'இன்ஃபுளூயன்ஸா ஏ' வைரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரவியதாகவும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் குறிப்பிட்டார். 2017 2018 இந்த வைரஸ் தாக்கத்தால் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் 61,000 பேர் இறந்துள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், கொரோனா வைரஸும் அதிகளவில் பரவினால் இந்த இரண்டு வைரஸ்களும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்'' என்றார்.


அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் சீனாவுக்குச் சென்று திரும்பியவர்கள். 6வது நபர், பாதிக்கப்பட்ட ஒருவரின் மனைவி ஆவார். ஆனால், இன்ஃபுளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு