இன்னிங்ஸிற்கு ரெடி.. கொண்டாட்ட தொடங்கிய ஆம் ஆத்மி.. ஆனால் கெஜ்ரிவால் போட்ட கண்டிஷன்!

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கி உள்ள நிலையில், டெல்லி ஆம் ஆத்மி அலுவலகம் ஏற்கனவே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்துவருவதால் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


டெல்லி முழுக்க பல இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.


தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலேயே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 41 இடங்களில் முன்னிலை, பாஜக 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது இந்த நிலையில் டெல்லி ஆம் ஆத்மி அலுவலகம் ஏற்கனவே வெற்றி கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.


டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிதான் மாபெரும் வெற்றியை பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தது. டெல்லியில் ஆம் ஆத்மி குறைந்த பட்சம் சராசரியாக 54 -60இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.


ஆம் ஆத்மி உறுப்பினர்கள் எல்லோரும் இப்போதே வெற்றி கொண்டாடி வருகிறார்கள் . ஆம் ஆத்மி அலுவலகம் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இப்போதே தொண்டர்கள் சுவீட்களை வழங்க தொடங்கி உள்ளனர். அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மக்களுக்காக 5 ஆண்டுகாலம் பணி செய்திருக்கிறோம்; நாங்கள் வெற்றி பெறுவோம், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


அதே போல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தொண்டர்கள் அமைதியாக கொண்டாட வேண்டும். டெல்லி மாசுபாட்டை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். டெல்லியில் எங்கு வெடி வெடிக்க கூடாது. அமைதியான முறையில் வெற்றியை கொண்டாட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு