அமைச்சர் மல்லாடி பேட்டியில் நிருபர்போல் ஊடுருவி உளவு பார்த்த ஒற்றன்

புதுவையில் ஆளும் அர சுக்கும், கவர்னருக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. கவர்னர் கூறும் குற்றச்சாட் டுகளுக்கு ஆட்சியாளர்கள் பதில் கூறுவதும், ஆட்சி யாளர்களின் குற்றச்சாட்டு களுக்கு கவர்னர் குறை கூறுவதும் வாடிக்கையான ஒன்றாகி வருகிறது.


இதனி டையே ஆட்சியாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கவர்னருக்கு உடனுக்குடன் தெரிந்துவிடுகிறது. ஆட்சியாளர்கள் நடத்தும் ரகசிய கூட்டங்கள் முதல் அதில் பேசப்படும் விஷயங்கள் வரை கவர்னர் காதுகளுக்கு உடனுக்குடன் சென்றுவிடு வது எப்படி என்ற குழப்பமும் நிலவி வருகிறது.


ஆட்சியாளர் களின் அடுத்த கட்ட செய் கைகளை தெரிந்துக்கொண்டு அதற்கேற்றார்போல கவர்னர் செயல்படுவது வாடிக்கையான ஒன்றாகி வருகிறது.


ஒரு இடத் தில் ஆட்சி யாளர்கள் காலையில் ஆய் வுக்கு செல்வதாக முடிவெடுத் திருந்தால், இரவே தனது சகாக்களுடன் சென்று ஆய்வு நடத்துவது கவர்னரின் செயல் களில் ஒன்றாகி உள்ளது. விஷயங்கள் எப்படி கசிகிறது என ஆட்சியாளர்கள் தலையை பிய்த்துக்கொண்டு உள்ள நிலையில், அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கவர்னரின் அலு வலகத்தில் பணிபுரியும் ஒருவர் வந்து கையும் களவுமாக மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் திருந்தார். அதில் செய்தியாளர் களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது, சந்தேகப்படும் படியான ஒரு நபர் உள்ளே அமர்ந் திருப்பதை கண்டு செய்தி யாளர்கள் சிலர் அவரை யார் என கேட்டுள்ளனர்.


அதற்கு அந்த நபர் எந்தவித பதிலும் கொடுக்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பிறகுதான் அவர் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் ரிசர்வ்படை போலீஸ்கரார் என்பது தெரியவந்தது.


அந்த ரிசர்வ்படை போலீஸ்கரார் இங்கு எடுத்த வீடியோ ஆதாரங்களை கவர்னருக்கு உடனுக்குடன் அனுப்பியதா கவும் கூறப்படுகிறது. இதனை உறுதிபடுத்துவது போல அமைச்சர் செய்தியாளர் களை சந்தித்த சில மணி நேரங்களில் கவர்னர் கிரண் பேடி அமைச்சருக்கு பதில் அளித்துள்ளது குறிப்பி டதக்கது.


இதுபோன்று அந்நியர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு களில் நுழைவது அண்மை காலங்களாக அதிகரித்துள்ளது. கடந்த 12-ந்தேதி கூடிய சட்டமன்ற கூட்டத்தில் அடை யாள அட்டை இல்லாத சிலரும் உள்ளே வந்து செல்போன் மூலம் அங்கு நடந்தவற்றை பதிவு செய்து சென்றனர். உண்மையான செய்தியாளர் களை உள்ளே அனுமதிக்க துருவிதுருவி விசாரிக்கும் போலீசார் போலிகளை எப்படி உள்ளே அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை .


வாட்ஸ்அப் குரூப் நடத்து பவர்கள் எல்லாம் பத்திரி கையாளர்கள் என ஏமாற்றிக் கொண்டு உள்ளே முக்கிய நிகழ்வுகளில் ஊடுருவுவதை சம் மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுக்க வேண்டும். அடையாள அட்டை, அங்கீகார அட்டைகளை உடனடியாக வழங்கி போலிகளை புறந்தள்ள வேண்டும் என பத்திரி கையாளர்கள் எதிர்பார்க் கிறார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்