அதிர்ச்சியில் நிகழ்ச்சியை ரத்துசெய்த ஆட்சியர்!
தாம்பரம் அருகே உள்ள பீரக்கன்காரணை ''பேரூராட்சி அலுவலகத்தில் ஐனவரி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் தூய்மை பசுமை நிகழ்ச்சி மற்றும் பிளாஸ்டிக் மாற்று பொருள் கண்காட்சியை செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பேரூராட்சிகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருந்தனர். முதலில் இந்த நிகழ்ச்சியை பெருங் களத்தூர் பகுதியில் நடத்துவதற்கு மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியை யார் நடத்துவது என்ற போட்டி இரு பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும் இடையே ஏற்பட்டது.
இந்நிலையில் பீர்க்கன்காரணை பேரூராட்சி இந்நிலையில் பீர்க்கன் செயல் அலுவலர் சுமா இந்த நிகழ்ச்சியை எப்படியாவது தான் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் பெயர் எடுக்க வேண்டுமென திட்டமிட்டு, ஆளுங்கட்சியை சேர்ந்த பீர்க்கன்காரணை பேரூராட்சி முன்னாள் தலைவர் சம்பத் என்பவருடன் கூட்டு சேர்ந்து, அவரது உதவியுடன் பீர்க்கன் காரணை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பசுமை நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தார். அதற்காக மேற்கூரை பந்தல், சிறிய கடைகள் மற்றும் ஸ்டால்கள் அமைக்க பேரூராட்சி அலுவலகத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இருந்த 20க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி சாய்த்தார்.
அரசு மரங்களை வளர்க்க பல விதமான முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் தூய்மை பசுமை விழா என கூறி அனைத்து மரங்களையும் வெட்டி சாய்த்த பீர்க்கன் காரணை பேரூராட்சி செயல் அலுவலருக்கு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முன்னாள் அதிமுக தலைவர் சம்பத் ஆதரவால் அந்தப் பகுதியை சேர்ந்த பல முக்கிய நபர்கள் சமாதானம் செய்து வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், பீர்க்கன்காரணை பேரூராட்சி செயல் அலுவலருக்கு சரியான டோஸ் கொடுத்ததுடன், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தனது பெயர் கெட்டு விடும் என புரிந்து கொண்டு அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டார்.