கடத்தல்காரர்களை நடுக்கடலில் பதறவைத்த கடற்படை- கரையில் மடக்கிய போலீஸ்!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கடத்தி வருவதற்காகக் கொண்டு வரப்பட்ட 14.35 கிலோ தங்கக் கட்டிகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.


இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ 1.5 கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்கக் கட்டிகளை இந்திய கடற்படையினர் துணையுடன் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் கைப்பற்றினர். இது குறித்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உச்சிப்புளி ஐ.என்.எஸ் விமானப்படை முகாமில் இருந்து நேற்று முன்தினம் காலை தனுஷ்கோடி கடல் பகுதியில் கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து சென்றனர். அப்போது தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகில் 3 பேர் இந்திய பகுதிக்குள் வருவதைக் கண்டனர்.


இதையடுத்து அவர்களை ஹெலிகாப்டரில் இருந்தபடியே தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்குத் துரத்தினர். அங்கு கரையேறிய அவர்களிடம் கடற்படையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் 3 பேரும் மீன்பிடிக்க வந்ததாகவும், காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து 3 பேரும் தமிழக கடலோரக் காவல் குழும போலீஸாரிடம் கடற்படை வீரர்கள் ஒப்படைத்தனர்.


அவர்களிடம் விசாரணை செய்தபோது கடற்படையினரிடம் கூறியதையே திரும்பவும் கூறியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கடத்தி வருவதற்காகக் கொண்டு வரப்பட்ட 14.35 கிலோ தங்கக் கட்டிகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.


இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனால் சந்தேகமடைந்த மெரைன் போலீஸார் மற்றும் கியூ பிரிவு போலீஸார் அவர்களிடம் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் தாங்கள் தங்கம் கடத்தி வந்ததாகவும், அதைத் தங்கச்சிமடம் பகுதியில் உள்ளவர்களிடம் கொடுத்துவிட்டு செல்வதற்காக வரும்போது தங்களை ஹெலிகாப்டர் மூலமாகக் கடற்படையினர் பிடித்துவிட்டதாகவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து


இலங்கை மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த தியோனி, தனுஷியஸ் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த லட்சுமணன், சர்வேஸ்வரன் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். மேலும் இலங்கை மீனவர்கள் தெரிவித்தபடி அவர்களுடைய படகின் பின்புறத்தில் உடைத்துப் பார்த்தபோது அதில் தலா 100 கிராம் எடை கொண்ட 35 தங்கக் கட்டிகள் இருந்தன. அதைப் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


ரூ. 1,48,40,000 ரூபாய் மதிப்புடைய தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த லூயிஸ் அலோசியஸ், சுதன், வினிஸ்டோ மற்றும் தங்கச்சிமடம் மீனவர்கள் தியோனி, தனுஷியஸ், லட்சுமணன், சர்வேஸ்வரன் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள சுங்கத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த ஆண்டில் மட்டும் இலங்கையிலிருந்து கடல் வழியாக 37 கிலோ தங்கம் இந்தியாவுக்குக் கடத்தப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 19 பேர் மற்றும் 18 படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.


இந்நிலையில் முதல் முறையாக இந்திய கடற்படை மற்றும் தமிழகக் கடலோரப் பாதுகாப்பு குழுமம் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் இணைந்து வேட்டையாடியது, கடத்தல்காரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்