வெடித்து கிளம்பிய வண்ணாரப்பேட்டை பரபரப்பு.. விடிய விடிய போராட்டம்.. நடந்தது என்ன !

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-க்கு எதிராக போராடிய பெண்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடியவர்கள்.


மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.. வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன? குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல, தமிழகத்திலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே ஏராளமான முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்களும் திரண்டனர்.


சிஏவுக்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார், உடனே கலைந்துபோகும்படி அறிவுறுத்தினார்களாம்.. ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துள்ளதாக தெரிகிறது.. இதன்காரணமாக, போராட்டக்காரர்கள் மீது போலீசார் லேசான தடியடியும் நடத்தி உள்ளனர்..


இதுதான் கலவரத்தின் முதல்படியாக அமைந்தது. அந்த நேரம் பார்த்து, போலீசார் மீது சிலர் கற்களை வீசியிருக்கிறார்கள்.. இதனால் போராட்டத்தில் பங்கேற்ற 2 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது. போராட்டக்காரர்களில் 2 பேர் காயமடைந்ததுபோலவே, இணை ஆணையர் விஜயகுமாரி உட்பட ஒரு பெண் போலீசும் காயமடைந்துள்ளனர்.. இது கலவரத்தை மேலும் சூடேற்றிவிட்டது.. பரபரப்பும் தொற்றிக் கொண்டது.. சூழலும் சரியில்லாமல் போகவே, அந்த பகுதியில் இருந்த கடைகளை மூட தொடங்கினர்.


இதனிடையே, போராட்டக்காரர்கள் 120 பேரை போலீசார் கைது செய்து, அங்கிருந்த ஒரு சமூக நலக் கூடத்தில் அடைத்தனர்.. காயமடைந்த 2 பெண் போலீஸையும், பக்கத்தில் இருந்த ஒரு தனியார் ஆஸ்பத்தியிலும் அனுமதித்தனர்... அதற்குள் இந்த தகவல் தீயாக பரவியது.. மேலும் சில முஸ்லீம் அமைப்பினர் திரண்டு வந்து போராட்டத்தில் குதித்தனர்.. இதில் மொத்தமாக டிராபிக் ஜாம் ஏற்படவும், அதிகாரிகள் விரைந்து வந்தனர்..


கமிஷனர் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.. ஆனாலும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை ... நிலைமை சீரியஸ் ஆவதை உணர்ந்து, மேலும் பல போலீசார் குவிக்கப்பட்டனரே தவிர, போராட்டக்காரர்களின் கோபத்தையும், ஆவேசத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை ..


கடைசியில் கமிஷனர் ஏகே விசுவநாதன் விரைந்து வந்தார்.. அவர் வந்து இஸ்லாமிய இயக்க நிா்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.. அப்போதும் சமாதானம் ஏற்படவில்லை .


மதுரை, தேனி இதெல்லாம் வண்ணாரப்பேட்டையில் நடந்து கொண்டிருக்கும்போது, தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து, ஆலந்தூர் மெட்ரோ ரெயில்வே ஸ்டேஷன் அருகே சில முஸ்லிம் அமைப்பினர் திடீரென போராட தொடங்கினர்.. இதையடுத்துதான், மதுரை கோரிப்பாளையம், தேனி, திருவண்ணாமலை, என தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.. பதற்றமும் தொற்றிக் கொண்டது.. போலீசார் படு தீவிரமானார்கள்.. எங்கேயுமே கலவரம் எதுவும் வந்துவிடக்கூடாது என உஷாரானார்கள்..


வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 120 பேரை விடுதலை செய்தனர்.. இந்த போராட்டத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகள் பரவியது..


ஆனால், அது பொய்யான செய்தி என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் உடல்நலம் குறித்து வெளியாகும் செய்தியில் உண்மையில்லை ... முதியவர் இறந்ததற்கும், சிஏஏ போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கமும் தரப்பட்டு வருகிறது.... விடிய விடிய இஸ்லாமிய அமைப்பினர்போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தமிழகத்தை லேசான பதற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறது.


இதில் பெண்களே இறங்கி உள்ளது இந்த போராட்ட வலிமையை கூட்டி வருகிறது.. டெல்லி போராட்டத்தை போலவே சென்னையிலும் பெண்கள் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.. வண்ணாரப்பேட்டையில் தொடங்கியிருக்கும் இந்த போராட்டத்துக்கு "சென்னையின் ஷாஹீன் பாக்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எனினும், விரைவில் தமிழகத்தில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்