சட்டமன்றத் தேர்தல்`நவம்பரில் காய் நகர்த்தும் அ.தி.மு.க!’- அலர்ட்' செய்த துரைமுருகன்

வேலூர் மாவட்ட தி.மு.க சார்பில், பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.


இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க பொருளாளர் துரைமுருகன், ``தினமும் ஆயிரம் வேலைகள் இருக்கும்போது, மாவட்டச் செயற் கூட்டத்தில் துரைமுருகன் கலந்துகொள்கிறார் என்று தலைமைக் கழகத்திலிருப்பவர்கள் என்னைப் பார்த்து கேலி செய்கிறார்கள்.


அதற்கு, நீங்க பாட்டுக்கு ஓர் நாள் என்னை அம்போனு விட்டுட்டு போய்டுவீங்க... எனக்கு எங்க ஆளுங்க முக்கியம்’னு சொல்வேன். உட்கட்சித் தேர்தலில் குறைபாடு இருப்பது உண்மைதான்.


கல்யாண மண்டபத்தில் அமர்ந்துகொண்டு ஒன்றிய செயலாளரோ நகரச் செயலாளரோ கூட்டம் நடத்தினால் மறுநாள் முரசொலியில் கட்டம் கட்டிடுவேன்.


வரும் நவம்பர் மாதத்திலேயே சட்டமன்றத் தேர்தல் வரலாம். அதற்கான திட்டத்தை அ.தி.மு.க வகுத்துள்ளது.கொஞ்சம்கூட சோம்பல் இல்லாமல் கட்சிப் பணியை செய்ய வேண்டும்.


கலைஞரைவிட ஸ்டாலினிடம் போராட்டக் குணத்தை அதிகமாகப் பார்க்கிறேன். எதற்கெடுத்தாலும் அறிக்கைவிட்டு விளாசுகிறார்.


தொண்டர்களிடமும் அதேபோன்ற போராட்ட குணம் இருக்க வேண்டும். மத்திய அரசின் நிதிக்குழு, மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குகிறது.


நாம் இருவர் நமக்கு இருவர்... நாம் இருவர் நமக்கு ஒருவர்... நாமே இருவர் நமக்கு ஏன் ஒருவர்? என்று சொல்லிச் சொல்லி குடும்பக் கட்டுப்பாடு செய்து தமிழகத்தில் மக்கள் தொகையை ஒழித்துவிட்டார்கள்.


அதனால்தான்நிதியையும் குறைத்துவிட்டார்கள். வடநாட்டில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. செஞ்சுரி அடிப்பதைப்போல் குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.


நிதி அமைச்சகத்தின் அநியாயம் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை நாடே திரும்பிப் பார்த்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, ஸ்டாலின் தூங்கியிருந்தால் தி.மு.க இந்த அளவுக்கு வெற்றிபெற்றிருக்க முடியாது.


பணம் மட்டுமே வெற்றிபெறும் என்றால் தி.மு.க செத்து அந்த இடத்தில் முள் முளைத்திருக்கும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)