முதலமைச்சரைச் சந்தித்து எஸ்டிபிஐ கட்சி ஆலோசனை

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் நேற்றிரவு சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்பிஆர் சட்டத்தை தமிழகத்தில் அப்படியே அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் உறுதியளித்திருப்பதாகக் கூறினார்.


முன்னதாக, வண்ணாரப்பேட்டையில் போராடி வருபவர்களின் பிரதிநிதிகள், அமைச்சர் ஜெயக்குமாரை அவரது சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இஸ்லாமியர்களின் உரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும் என உறுதியளித்தார்.


இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் போராட்டம் நீடித்தது. திண்டுக்கல்லில் ர் பள்ளி வாசல் அருகே இஸ்லாமியர்கள் 200 க்கும் மேற்பட்டோர் சென்னை தடியடி சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களை பணி நீக்கம் செய்யக் கோரி நேற்றிரவு முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். முன்னெச்சரிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


பழனியில் சின்ன பள்ளிவாசல் முன்பு 500 க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்தும், சிஏஏவுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில், போலீசார் சமரசத்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.


செங்கல்பட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சிஏஏ, என்பிஆர். என்ஆர்சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 19ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்