ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிக்கை !

 


ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . 
 
டெல்லி , ஜாபர்பாத்,முஜ்பூர் மற்றும் பாஜன்புரா, போன்ற பகுதிகளில்  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்கள்.  


இந்த நிலையில் வட கிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராத் அருகே மாஜ்பூரிலும் நேற்று முந்தியதினம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஏதிராக போராட்டம் பரவிய சூழலில் பா.ஜ.கவை சேர்ந்த எம்.பி. கபில் மிஸ்ரா அப்பகுதிக்கு சென்று போராட்டத்தை கலைந்து செல்லாவிட்டால் போலீஸ் இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டோம் உங்களை நாங்களே விரட்டுவோம் என நேரடியாக எச்சரிக்கை விடுத்த எம்.பி.கபில் மிஸ்ராவின் அராஜக  செயலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது . 


பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு ஆதரவாக பேரணி நடத்துவதாக கூறி அங்கு வந்தனர் அடுத்த சிலமிடங்களிலே பா.ஜ.க.ஆதரவாளர்கள் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை கொண்டு விசினர்.


இதில் பெண்கள் உட்பட பலருக்கு மண்டை உடைந்தது .இதில் ஓரு போலீஸ் காரர் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


என்பது குறிப்பிடதக்கது . இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அம்மாநில அரசு சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் மெ ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. 


 கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்க்கு தலா 20 லட்சம் ரூபாய் டெல்லி அரசு வழங்க வேண்டும் . உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் . 


 எனவே  :   குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மற்றும் படு கொலை செய்த கும்பலை கண்டறிந்து சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஏதிராக போராடும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் அம்மாநில அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்