கோமா நிலையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு......

திருப்பூர் , உடுமலைப் பேட்டை வருவாய் வட்டத்திற்கு உட் பட்டது குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம். இது திருப்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதி. திருப்பூரிலிருந்து உடுமலைப் பேட்டை செல்லும் வழியில் உள்ள குடிமங்கலம் பகுதியானது பல்வேறு கிராமங்களை உள்ளடக்கியது. வாடிக் கையாக பயன்படுத்துபவர்களே அந்த சாலையில் செல்லும் வழியில் குழம்பிப் போய் விடுகின்றனர் அந்தளவுக்கு குழப்பம் மிகுந்த சாலை. இங்கு பல சமூக விரோத செயல் களும் கடத்தல் போன்ற குற்றங்களும் நடந்த வண்ணம்தான் உள்ளது. அதில் ஒன்றுதான் ரேஷன் அரிசி கடத்தல்.


பெரும்பாலும் அதிகாரிகள் உடுமலை திருப்பூர் சாலையில் உள்ள பகுதிகளை மட்டுமே கண்காணிப்பில் வைத்துள்ளனர். கிராமங்கள் வழியாக செல்லும் சாலையில் அதிகாரிகள் செல்வதில்லை. இதனைப் பயன்படுத்திதான் பல சமூக விரோத செயல்களும் கடத்தல்களும் இந்த பகுதியில் அரங்கேறி வருகிறது.


குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு கிராம ஊராட்சிதான் ஆமந்தகடவு.இந்த அக்கிரமத்தகடவு ஊராட்சியில் கூட்டுறவுத் துறை சார்பில் இயங்கிவரும் நியாயவிலைக்கடைதான் IP 073 - P1 என்ற எண் கொண்ட பகுதி நேர அங்காடி(கடை).இந்த கடையானது K2553 அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.


கடந்த 23.01.2020 சுமார் 3 மணி அளவில் மேலே குறிப்பிட்டுள்ள கடையில் இருந்து சுமார் 80 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியை அடையாளம் தெரியாத ஒரு நபர் TN22H4168 வெள்ளை நிற மாருதி ஜென் வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தார்.


அந்த அரிசி மூட்டையை வாகனத்தில் ஏற்றிய சில வினாடிகளிலேயே பதட்டத்துடன் அதி வேகத்தில் அந்த வாகனத்தை அந்தப் பகுதி யின் காட்டு வழி சாலையில் செலுத்தினார்


பதட்டத்துடன் கடையிலிருந்து மூட்டையுடன் அதிவேகத்தில் சென்ற அந்த கார் மீது சந்தேகப்பட்டு மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்ட போது வாகனத்தை ஓட்டி சென்ற அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.


இத்தனை அரிசியை எங்கு கொண்டு செல்கிறார் என்று கேட்டதற்கு அப்பாவுக்கு ஆப்ரேஷன், மனைவிக்கு வளைகாப்பு, மச்சினிச்சிக்கு சீர் என பேய் கதை சொல்ல ஆரம்பித்தார். அ குண்டான பில் எங்கே என்று கேட்டதற்கு அங்கேயே கிழித்துப் போட்டு விட்டு வந்து விட்டேன் என்றார். மேலும் இது இரண்டு ரேஷன் கார்டுகளுக்கு உண்டான அரிசி என்றார்.


அந்த இரண்டு ரேஷன் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்டு எங்கே என்று கேட்ட கேள் விக்கு அவரிடம் பதில் இல்லை ஸ்மார்ட் கார்டு இல்லை. இதனைத் தொடர்ந்து உடு மலைப்பேட்டை வட்ட வழங்கல் அதிகாரி யான விவேகானந்தருக்கு 9442127940 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித் தோம். உடனே கவனிப்பதாக சொன்ன விவேகானந்தன் தொடர்பைத் துண்டித்து ஐந்தாவது நிமிடமே உடுமலைப்பேட்டை வட்ட வழங்கல் அலு வலகத்திலிருந்து நம்மை தொடர்பு கொண்டு கேட்டனர்.


நடந்ததை விளக்கிச் சொன்ன போது அந்தப் பகுதி சிவில் சப்ளை வருவாய் ஆய்வாளர் பணி காலியாக உள்ளதாகவும் உடுமலைப்பேட்டையில் இருந்து வர அரை மணி நேரமாகும் என்று கூறியதை அடுத்து அந்த அரிசி கடத்தல் ஆசாமி தப்பி சென்று விட்டார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்கு சென்று அதன் விற்பனையாளர்கள் செல்வ ராஜிடம் இதுகுறித்து கேட்டபோது, “நான் கடத்த ல்லாம் துணை போகவில்லை;


குடும்ப அட்டைக்கு மட்டுமேதான் அரிசி போட்டேன்" என்று கூறினார். ஆனால் அந்த அரிசி கடத்தல் ஆசாமி டமே ஸ்மார்ட் கார்டு (குடும்ப அட்டை) கிடை யாது. அப்படி இருக்க விற்பனையாளர் செல்வராஜ் கூறுவதுபோல் எப்படி குடும்ப அட்டைக்கு இவர் அரிசி போட்டு இருக்க முடியும். மேலும் பொருள் வாங்க வந்த அப்பாவி ஏழை பொது மக்களிடம் பார்த்தீர் களா உங்களுக்கு அரிசி போட்டால் என்னை மிரட்டுகிறார்கள் என்னை கேள்வி கேட் கிறார்கள் என்று நீலிக் கண்ணீர் வடித்தார் செல்வராஜ்.


அப்போ அந்த அரிசி கடத்திச் சென்ற அந்த ஆசாமி யார்? அரிசியுடன் தப்பிச் சென்று அவருக்கும் விற்பனையாளர் செல்வரா கும் என்ன சம்பந்தம்? இதை செல்வராஜ்தான் விளக்க வேண்டும்.


இப்படி அரசாங்கத்தால் ஏழை எளிய மக்கள் பசியாற்ற கொடுக்கும் யாய விலை கடை அரிசியை கடத்தி விற்கும் செல்வராஜ் போன்ற ஆட்களை எதைக்கொண்டு அடிப்பது. இப்படி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து தன் வீட்டுக்கு உலை வைக்கும் செல்வராஜ் விற்பனையாளர் பணியை வேற ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம்.


ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிப்பது எல்லாம் ஒரு வேலையா? இதெல்லாம் ஒரு பிழைப்பா? இது எல்லாம் திருப்பூர் வஞ்சி பாளையத்தில் உள்ள உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு தெரியாதா? அங்குள்ள காவலர்கள் அனைவரும் அங்கேயே தங்கி துணி துவைத்து சமையல் செய்து உறங்கி வருவது 24 மணி நேரமும் கண்காணிக்கவா... இல்லை அரசு செலவில் அர சாங்கக் கட்டடத்தில் தங்கியிருப்பது தங்கள் வீட்டு வாடகை மிச்சம் செய்வதா என்று தெரிய வில்லை


உடுமலைப்பேட்டை வட்ட வழங்கல் அலு வலர் விவேகானந்தன் சிறப்பு கவனம் செலுத்தி வருவாய் ஆய்வாளர் இல்லாத இடங்களில் கூடுதல் மட்டுமே இத்தகைய கடத்தலை தடுக்க முடியும்.


காலி பணியிடங்க அலுவலர்கள் தட்டுப்பாடு இருப்பது என்னவோ உண்மைதான். இருப்பினும், இருக்கின்ற அ வைத்து கட்டுப்படுத் ஏழை எளிய மக்களின் பசி ஆறும். இதனை காதில் வாங்கி நடவடிக்கை எடுப்பதோடு விற்பனையாளர் செல்வராஜ் மீதும் நடவடிக்கை பாயுமா? நியாய விலை கடை அரிசியை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களின் துயரம் தீருமா?


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்