சிறுவனுக்கு ஆதரவு குரல்கள் உலகமெங்கிலும் வலுத்துக்கொண்டே வருகிறது

கடந்த வாரம் பள்ளி சிறுவன் ஒருவன் மனம் வெதும்பி தற்கொலை செய்துக்கொள்வதாக தனது தாயிடம் பேசும் வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் யர்ராகா பேல்ஸ்.


இவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ், மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான். தனால் தன்னை உடன் படிக்கும் சக மாணவர்கள் உருவ கேலி செய்வதாகவும், குள்ளன் என அழைப்பதாகவும் அழுதுகொண்டே தனது தாயிடம் பேசினார்.


மேலும், “எனக்கு இங்கு வாழ்வதற்கே விருப்பமில்லை; ஒரு கயிறு இருந்தால் கொடுங்கள், நான் இறந்துவிடுகிறேன். இல்லை யாராவது என்னை கொன்றுவிடங்கள்” எனப் பேசியுள்ளான். சிறுவன் அழும் வீடியோவை அவரது தாய் சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.


உலகமெங்கும் இருக்கும் மக்களிடம் சென்ற அந்த வீடியோ மக்கள் பலரையும் ஒன்றுசேர்ந்தது கேலி மற்றும் கிண்டலுக்கு எதிராக பேச வைத்துள்ளது. அதுமட்டுமின்றி சக மனிதர்களிடம் அன்புக்காட்டவேண்டும் என பாடத்தையும் புகட்டியுள்ளது.


மேலும், குவாடனுக்கு ஆதரவாக திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் என உலகம் முழுவதும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், National Rugby League - தேசிய ரக்பி விளையாட்டை போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா வீரர்கள் குவாடனுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


அந்த வீடியோவில், “நாங்கள் எல்லோரும் உனது நண்பர்கள்தான், நீயும் மிகுந்த பலசாலியானவன்” என பேசியுள்ளனர். அதனையடுத்து உலக அளவில் நடக்கும் விளையாட்டு பேட்டியில் குவாடனையும் ரக்பி மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது குவாடன் கையை ரக்பி அணியின் கேப்டன் ஜோயல் தாம்ப்சன் பிடித்துக்கொண்டு முன்னே சென்றனர்.


அவர்களை பின் தொடர்ந்து சக வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். மைதானத்திற்குச் சென்றதும் குவாடன் கைகளால் தங்களது பந்தை பெற்று அவனை கௌரவப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.


இதனைக் கண்ட குவாடனும் மிகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கி போயின. இதுதொடர்பாக வெளியாக புகைப்படம் மற்றும் வீடியோவைப் பகிர்ந்து பலரும் குவாடனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு