காதலிக்காக கூலிப்படை வைத்து மனைவியை கொல்ல முயன்ற கணவன்

பேஸ்புக்கில் காதலித்த ஒரு பெண்ணுக்காக கட்டிய மனைவியை கூலிப்படையினரை வைத்து கொலை செய்ய முயன்ற கணவர் ஒருவரால் கன்னியாகுமரி மாவட்டதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிகோடு அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் தேவகுமாரி பட்டதாரியான இவர் வெள்ளிகோடு பகுதியை சேர்ந்த ரூபஸ் ஜெரால்டு என்பவரை கடந்த 15-வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்தின் போது தேவகுமாரியின் தந்தை வரதட்சனையாக 10-லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 101-சவரன் நகைகளையும் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.


2 குழந்தைகளுடன் சந்தோஷமாக தம்பதியர் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் ஓய்வு நேரத்தில் ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்த ரூபஸ், திடீரென ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஃபேஸ்புக்கில் உருவான இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதன் பின்னர் ஒரு நாள் ஃபேஸ்புக் காதலியை கேரளா சென்று நேரில் சந்தித்த ரூபஸ், அவரது அழகில் மயங்கி மனைவியின் நகைகளை விற்று அந்தப் பெண்ணுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்துள்ளார்.


மனைவி உடல்நிலை சரியில்லாமல் குழந்தைகளுடன் தாயார் வீட்டிற்கு சென்ற நிலையில் ரூபஸ் ஜெரால்டு கள்ள காதலியுடன் மூலச்சல் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார்.


இதனால் மனைவி தேவகுமாரி மூலச்சல் பகுதிக்கு சென்று தனது கணவர் மற்றும் அவரது காதலியை கண்டித்ததாக தெரிகிறது இதனால் விரக்தி அடைந்த ரூபஸ் ஜெரால்டு கடந்த வாரம் மனைவியை கொலை செய்யும் நோக்கத்தோடு 20-பேர் கொண்ட கும்பலுடன் தேவகுமாரியின் வீட்டிற்கு சென்றார் ஆனால் வீட்டில் யாரும் இல்லை


இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டின் முன்பக்க கேட் மற்றும் வீட்டின் கதவுகளின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியது.


இது குறித்து தகவலறிந்து வீட்டிற்கு வந்த தேவகுமாரி காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் தேவகுமாரியின் கணவர் ரூபஸ் ஜெரால்டு,கூலிப்படையான மூலச்சல் பகுதியை சேர்ந்த சதீஷ்,சுதன் என்ற அருள் ஜார்ஜ்,மற்றும் ஆல்பின் மோகன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேவகுமாரியின் கணவர் உட்பட தலைமறைவான கூலிப்படையை சேர்ந்த நான்கு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)