முடங்கிய சீனாவின் தற்போதைய நிலை என்ன..

சனிக்கிழமையான இன்றைய நிலவரப்படி சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்குப் பலியானோர் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது, இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,500 ஆக அதிகரித்துள்ளது.


சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் அறிவிப்பின்படி மேலும் 86 பேர் மரணமடைந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சார்ஸ் வைரச் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கையை விட கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


மேலும் 3,499 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கரோனா பாதிப்பு உறுதியான எண்ணிக்கை 34,500 ஆக உள்ளது. சுமார் 56 மில்லியம் மக்கள் தொகையை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சீனா லாக் செய்திருந்தாலும் கரோனா பலிகளைத் தடுக்க முடியாமல் விழி பிதுங்கி வருகிறது.


இந்த வைரஸ் குறித்து டிசம்பரிலேயே எச்சரிக்கை விடுத்த மருத்துவரை சீனா எச்சரித்தது, ஆனால் அந்த மருத்துவரே கரோனாவுக்கு பலியானது அங்கு மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் கரோனா 24 நாடுகளுக்குப் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்