அச்சுறுத்தும் மதிவாணன்...!

இது தொடர்பான போஸ்டர் வேலூர் முழுக்க ஒட்டப் பட்டிருந்ததால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மதிவாணன் தன் கைத்தடிகளை கொண்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்துள்ளார்.  


'எம். எல்.ஏ பெயரை கூறி ஆட்டம் போடும் உதவி ஆணையாளர் மதிவாணன்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.வேலூர் மாநகராட்சியின் 2வது மண்ட உதவி உண்மை ஆணையாளர் மதிவாணன் அனைத்து மாநகராட்சி பணியாளர் சங்க தலைவராக இருப்பதால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள 12 சங்க நிர்வாகிகளை அழைத்து, இன்று எனக்கு ஏற்பட்ட நிலை நாளைக்கு உங்களுக்கும் ஏற்படலாம்' என கூறி, தான் உத்தமன் என காட்டிக்கொள்வதற்காக, மாநகராட்சி சங்க நிர்வாகிகளை, ஊழியர்களை அழைத்துக்கொண்டு வேலூர் எஸ்.பி. பிரவேஷ்குமாரிடம் அந்த செய்தியை வெளியிட்ட நிருபர் மீது புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.


அந்த புகார் மனுவில், 'என்னை செய்தி வெளியிட்ட நிருபர் அடிக்கடி பணம் கேட்டு மாநகராட்சி அதிகாரி மிரட்டுகிறார். எங்களால் பணி செய்ய முடியவில்லை .


ஆனால், பொறுமை மற்றும் அதிரடி நடவடிக்கைகளில் மூலம், 'வேலூர் மாவட்டத்தின் சிறந்த காவல் துறை அதிகாரி' என பல்வேறு தரப்பினரிடம் பாராட்டை பெற்றுவரும் வேலூர் மாவட்ட அதோடு போஸ்டர் ஒட்டி என்னை களங்கப்படுத்திவிட்டார். எனவே அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.


எஸ்.பி.பிரவேஷ்குமாரோ, 'நீங்கள் புகார் கூறும் நிருபர் உங்களை மிரட்டினர் என்றோ அல்லது பணம் கேட்டு மிரட்டினர் என்றோ ஆதாரம் உள்ளதா? என்று கேட்டதாகவும், அதற்கு அவர்கள் விழி பிதுங்கி, 'இல்லை ' என்று கூறி நிற்கவே, 'சரி விசாரிக்கச் சொல்கிறேன்' என அனுப்பி விட்டாராம்.


ஏற்கனவே இதே மாநகராட்சியில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தியதில் முன்னால் ஆணையாளர் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.


மற்றொரு ஆணையாளர் குபேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை நடந்த பின்பும், துளியும் அஞ் சாமல் 'லஞ்சம் மட்டுமே தனது குறிக்கோல்' என நினைத்து வாழும் இது மதிவாணன் போன்ற அதிகாரிகளை மக்கள் மன்றத்தின் முன் துகிலுறித்துக் காட்ட நமது இதழ் என்றைக்குமே தயங்கியது கிடையாது.


இந்த உதவி ஆணையாளர் மதிவாணனுக்கு 'ஆல் இன் ஆலாக' இருப்பது ஒரு முன்னால் தொலைக்காட்சி நிருபாதானாம். வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஒருகிணைந்த மாவட்டமாக இருந்த போது, 1990ம் ஆண்டு வாக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்படி நபர் கேபிள் டி.வி. நடத்தி வந்த போது, வாடிக்கையாளர் வீட்டுக்கு அடிக்கடி 'போக்குவரத்தில்' இருந்துள்ளாராம். அப்போது, 'மஞ்சள் பை ஒன்றில் இருந்த தங்க நகைகள் திருடு போய் விட்டதாகவும், அந்த கேபிள் பார்ட்டி மீது சந்தேகம் இருப்பதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர் புகார் கொடுக்கவே, இது தெரிந்த அந்த நபர், கிருஷ்ணகிரியை அடுத்த தளி சட்டமன்ற தொகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் மறைந்து இருந்துள்ளார் என்ற தகவல் சம்மந்தப்பட்ட காவல் துறைக்கு செல்லவே, அந்த முன்னாள் தொலைக்காட்சி நிருபரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது.


இதனால், வேதனையும் அவமானமும் அடைந்த திமுக - ஊராட்சி தலைவரான அந்த 'கேபிள் பார்ட்டியின்' தந்தை, தனது இரண்டாவது மகளின் நிச்சயதார்த்தத்திற்குக் கூட அந்த திருட்டு மகனை அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


அப்படிப்பட்ட உத்தமன் தான், வேலூர் முழுக்க உள்ள லஞ்ச அதிகாரிகளின் ஆபத்பாந்தவன் என்றும், உண்மைச் செய்தி வெளியிடும் சக பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்புபவர் எனவும் புலம்பும் வேலூர் நிருபர்கள், மணல் கடத்தல், மூணு சீட்டு லாட்டரி, ஆர்.டி.ஓ அலுவலகம், பத்திரபதிவு அலுவலகம், டாஸ்மாக் கடைகள் முதல் காட்டன் சூதாட்டம் நடக்கும் இடங்கள் வரை மாதாமாதம் வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும், அப்படி கிடைக்கும் பணத்தைக் கொண்டு குறுகிய காலத்தில் கார், சொந்த வீடு வாங்கி சொத்து குவித்து வருவதாகவும் குமுறும் சக பத்திரிகையாளர்கள் 'பூனைக்கு மணி கட்டப்போவது யார்?' என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்