சென்னை - ANPR சி.சி.டி.வி கேமராக்கள் இயக்கம் துவக்க நிகழ்ச்சி

நந்தனம், கிண்டி, டைடல் பார்க் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 9 ANPR (Automatic Number Plate Recognisation) சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை பயன்பாட்டிற்காக சென்னை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.


10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை நந்தனம் சந்திப்பில் 3 சி.சி.டி.வி கேமராக்கள், கிண்டி சந்திப்பில் 3 சி.சி.டி.வி கேமராக்கள், டைடல் பார்க் சந்திப்பில் 3 சி.சி.டி.வி கேமராக்கள் என மொத்தம் 9 ANPR சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை துவங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி நந்தனம் சந்திப்பு அருகே நடைபெற்றது.


இதில் சென்னை காவல் ஆணையர் அ.கா விஸ்வநாதன் கலந்துகொண்டு 3 இடங்களிலும் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை முழுவதும் உள்ள 335 சாலைகளில் 25 ஆயிரம் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைவதோடு மக்களின் பாதுகாப்பு குறித்த ஐயப்பாடு விலகியுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் வந்த பின்னர் வழிப்பறி தாக்குதல், சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பித்தல் (Hit and Run Cases) உள்ளிட்ட வழக்குகளில் 76% போக்குவரத்து காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், தற்போது பொருத்தப்பட்டுள்ள ANPR சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் ஒரு வாகனத்தின் எண் தட்டை வைத்து அந்த வாகனம் எந்த நேரத்தில் எந்த சாலையை கடந்துள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும் எனவும், இதன் மூலம் குற்றம் செய்துவிட்டு தப்பித்து செல்ல முயல்பவர்கள் யாராயினும் எளிதில் பிடிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் மற்றும் போக்குவரத்து இணை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். (மேடை பேச்சு - அ.கா விஸ்வநாதன் - சென்னை காவல் ஆணையர்)


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு